கவர்ச்சி நடிகை வாழ்க்கை வரலாறு ரெடி.. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய திட்டம்..

by Chandru, Dec 3, 2020, 10:17 AM IST

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீபகாலமாக அடிக்கடி உருவாகிறது. கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் படங்கள் பல உருவாகி வெளியாகி இருக்கின்றன. அதேபோல் சினிமா நடிகைகளின் வாழ்க்கையும் திரைப்படங்களாக உருவாகி இருக்கிறது. நடிகை சாவித்திரி வாழ்க்கை படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநதி என தெலுங்கிலும் உருவானது. அதேபோல் 80களின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் உருவானது. இதில் வித்யாபாலன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது.

தமிழில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பின்னர் மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்தவர் ஷகிலா. இவரது கவர்ச்சி படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் வட்டமே இருந்தது. இவரது படங்கள் ரிலீஸ் ஆகும்போது பிரபல நடிகர்கள் படங்கள் கூட சிலசமயம் தள்ளி ரிலீஸ் செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. தனது வாழ்க்கையே படமாகும் என்று ஷகிலா நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது நடந்திருக்கிறது.

கவர்ச்சி நடிகை ஷகீலா வாழ்க்கை படம் ஷகீலா என்ற பெயரிலேயே உருவாகி இருக்கிறது. இதில் ஷகீலா வேடத்தில் நடிக்கப் பல நடிகைகளிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர். இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு வருடத்துக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படம் முடிவடைந்துள்ளது. இந்தியில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்யப்படவிருக்கிறது. பல பிரபல நடிகர், நடிகைகளின் படங்கள் ஒடிடியில் வெளியாகும் நிலையில் ஷகீலா படத்தை டிசம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார். சர்வதேச அளவிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை