குடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..

by Chandru, Dec 3, 2020, 10:28 AM IST

சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. கடந்தவாரம் இதன் படப் பிடிப்பு நடந்தபோது நிதின், கீர்த்தி கலந்துகொண்டு நடித்தனர். அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும் இடை வெளியில் கீர்த்தி சுரேஷ் ஓய்வுக்காகத் தனது சேரில் அமர்ந்து கண்களில் துணியை வைத்து மறைத்தபடி குட்டி தூக்கம் போட்டார்.

இதைக் கவனித்த நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி இருவரும் பூனைபோல் மெதுவாக அவர் அருகில் சென்று தரையில் குத்தவைத்து அமர்ந்தனர். பிறகு கீர்த்தி குட்டி தூக்கம் போட்டநிலையில் இருக்கும் போது அவருடன் செல்ஃபி படம் எடுத்து அதை நெட்டில் வெளியிட்டு, நாங்கள் வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறோம். இவர் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் பாருங்கள் என்று கமெண்ட் பகிர்ந்தார் நிதின். இந்த புகைப்படம் நெட்டில் வைரலானது.

பின்னர் இந்த விஷயம் கீர்த்திக்கு தெரியவர அவர் தர்ம சங்கடமாக உணர்ந்தார். மறுநாள் இயக்குனர் வெங்கி படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததைக் கண்டதும் கீர்த்தி அங்கிருந்த குடையைத் தூக்கிக் கொண்டு அவரை விரட்டினர். கீர்த்தி குடையுடன் அடிக்க வருவதைக் கண்டு இயக்குனர் ஒட்டம் பிடித்தார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்று அவரை கீர்த்தி அடித்தார். அதை வீடியோவாக கீர்த்தி வெளியிட்டிருப்பதுடன் அடுத்து நிதினுக்குதான்.. சீக்கிரமே பழிக்குப் பழி வாங்காமல் விடமாட்டேன் என்று மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். ஒருவர் சிக்கிக்கொண்டார். அடுத்தவர் விரைவில் சிக்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்குப் பாலிவுட் ஆசை வரவே சுமார் ஒரு வருடம் அவர் அதற்கான முயற்சியில் இருந்தார்.

மும்பை சென்று தங்கினார். பாலிவுட் நடிகைகள் போல் உடலை இளைக்க உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்து ஒல்லி தோற்றத்துக்கு மாறினார். ஆனால் அவர் நடிக்க சென்ற படத்திலிருந்து அவரை கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம் மாறிவிட்டதாக கூறி ஒதுக்கினர். இதையடுத்து கீர்த்தி தமிழ், தெலுங்கு படங்களில் மீண்டும் கவனத்தைத் திருப்பி இருக்கிறார். தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வ ராகவனுடன் சாணி காகிதம் படங்களில் நடிக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்