நடிகை திருமணத்தில் பங்கேற்கும் நட்சத்திர கூட்டம் பட்டியல்.. உறவினர்கள் நடத்தும் சடங்கு தொடக்கம்

by Chandru, Dec 6, 2020, 10:20 AM IST

கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. பந்தாவாக நடத்த திட்டமிட்டிருந்த இந்த திருமணங்கள் கொரோனா அச்சம் மற்றும் லாக்டவுன் விதிமுறைகளால் எளிமையாக அதிக கூட்டம் சேர்க்காமல் குடும்ப உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். நடிகை காஜல் அகர்வால் மம்மூட்டியுடன் கடந்த ஆண்டு மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலன், மற்றும் நடிகை மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா இன்னும் பலருக்கு திருமணம் நடந்தது. தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள ஓபாராய் பேலஸ் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்ய கடந்த வாரமே நிஹாரிகா ராஜஸ்தான் புறப்பட்டு சென்றார். வரும் 9ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. தொழில் அதிபர் வெங்கட்ட சைதன்யாவை அவர் மணக்க உள்ளார். முன்னதாக திருமண கொண்டாட்டம் இப்போதே அவர்கள் குடும்பத்தில் தொடங்கிவிட்டது. குடும்பத்தினர் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் பாட்டு பாட பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழச்சியில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு நடனம் ஆட உள்ளார். திருமணத்தில் பங்கேற்கும் நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

நடிகர்கள் சிரஞ்சீவி,பவன் கல்யாண், ராம் சரண், வருண் தேஜ், அல்லு அர்ஜூன், அல்லு சிரீஷ், சாய் தரம் தேஜ், வைஷ்னவ் தேஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது தவிர மணமகன் வெங்கட சைதன்யாவின் குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள், அதேபோல் நிஹாரிகா நண்பர்கள், குடும்ப உறவினர்கள் பங்கேற்கின்றனர். நிஹாரிகாவுக்கு உறவின் முறையினர் தண்ணீர் ஊற்றும் சடங்கு, சந்தனம் வைக்கும் சடங்கு என பல சடங்கு முறைகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமணத்தையொட்டி பல நட்சத்திரங்கள் உதய்பூர் சென்றுள்ளனர். ஒட்டுமொத்த சிரஞ்சீவி குடும்பமும் இந்த திருமண விழாவில் கூடவிருப்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். சமீபகாலத்தில் நடக்கும் திருமணத்தில் இதுதான் பெரிய திருமண விழாவாகும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>



அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை