மகனுடன் சியான் விக்ரம் இணையும் படம் எப்போது?

by Chandru, Dec 6, 2020, 11:41 AM IST

கோலிவுட்டில் வாரிசு நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி, மயில்சாமி மகன் அன்பு என பல நடிகர்கள் வந்திருக்கின்றனர். அதே போல் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா, லிசி மகள் கல்யாணி, மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் என இன்னும் பலர் நடித்து வருகின்றனர். சேது நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் கடந்த ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி ரிமேக்காக தமிழில் உருவான ஆதித்ய வர்மா படத்தில் அவர் அறிமுகமானார்.

அடுத்த படத்துக்காக வெயிட்டிங்கில் இருந்த நிலையில் டைரக்டர் கார்த்தி சுப்புராஜ் விக்ரமிடம் தந்தை மகன் பற்றிய ஸ்கிர்ப்ட் ஒன்றைக் கூற அதைக்கேட்டு பிடித்துவிடவே நடிக்க சம்மதித்தார். இதில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் அவரது மகன் துருவ். இதற்கிடையில் விக்ரம், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். சரித்திர பின்னணி படமான இந்த படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது.மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு சூழல்கள் பொருந்திவராத நிலை உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டார். ஆனாலும் இன்னும் அடுத்த கட்டப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இப்படத்தில் விக்ரம் காட்சிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் அவரது 60வது படமாகும். இதன் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். விக்ரம் அவரது மகன் துருவ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை