அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடக்கம் தேதி.. ரஜினி கட்சி அறிவிப்பது எப்போது?

by Chandru, Dec 6, 2020, 12:19 PM IST

தர்பார் படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்த வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் கொரோனா தளர்வில் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு படப்பிடிப்பில் பங்கேற்பதாக ரஜினி தெரிவித்தார்.

எனவே அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டது கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ரஜினி ஹூட்டிங் வருவது உறுதி ஆனபிறகு படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். அதற்கு முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 15ம் தேதி முதல் அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படு கின்றன.

ஜனவரி மாதம் முதல் ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ஏற்கனவே 60 சதவீதம் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது, இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக வேண்டி உள்ளது. அதை ரஜினி விரைந்து முடித்து கொடுப்பார். அண்ணாத்த பட ஷூட்டிங் படத்தை முடிப்பதற்க்கு முன்பே ரஜினி தனிகட்சி தொடங்குவாரா அல்லது படத்தை முடித்து கொடுத்து விட்டு தொடங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சி தொடங்கும் தேதி பற்றி டிசம்பர் 31ம் தேதி ரஜினி அறிவிக்க உள்ளார். அநேகமாக பொங்கல் தினத்தில் கட்சி தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடக்கம் தேதி.. ரஜினி கட்சி அறிவிப்பது எப்போது? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை