நடன அரங்கிற்கு நடிகையை தோளில் தூக்கிச் சென்ற நடிகர்..

கொரோனா கால லாக்டவுனில் பல திருமணங்கள் நடந்தன. காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான், மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா எனப் பலருக்குத் திருமணம் நடந்தது. எல்லோருமே தடபுடலாகத் திருமணத்தை நடத்த முற்பட்டவர்கள் ஆனால் கொரோனா விதிமுறைகளால் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். விஐபிக்கள் என்று யாரும் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் ஒரு நடிகையின் திருமண விழா மட்டுமே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தாம்தூம் என்று நடத்துக்கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவரது திருமணம் தான் ஆடம்பரமாக நடக்கிறது. அதற்கு காரணம் அவரது குடும்ப பின்னணி. அந்த குடும்பத்தில் கிட்டதட்ட நடிகர்கள். நடிகர் சிரஞ்சீவின் அண்ணன் நாகபாபுவின் மகள் நிஹாரிகா. நாகபாபுவும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சிரஞ்சிவியின் மற்றொரு சகோதரர் பவன் கல்யாண். இவரும் டோலிவுட்டில் முன்னணி நடிகர். சிரஞ்சீவி மகன் ராம் சரண், நாகபாவின் மூத்த மகன் வருண் தேஜ். இவரும் டோலிவுட்டில் இளம் நடிகர். இப்படி ஒரு சினிமா நட்சத்திர குடும்பமாக நிஹாரிகா குடும்பம் திகழ்கிறது.

திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபாராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று( 9ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க 10 நாட்களுக்கு முன்பே நிஹாரிகா உதய்பூர் சென்றார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் கடந்த 5 நாட்களாக நடந்தது. நிஹாரிகாவுக்கு உறவுமுறையினர் தண்ணீர் ஊற்றி சடங்கு செய்தல், பெண் அழைப்பு, மெஹந்தி விழா, சங்கீத் விழா என அமர்க்களப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்கச் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர், பவன் கல்யான் என எல்லோரும் உதய்பூர் சென்றனர்.நேற்று குடும்பத்தினர் அனைவரும் நடன அரங்கில் கூடி நடனம் ஆடினார்கள். சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட அனைவருமே நடனம் ஆடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்ய நிஹாரிகாவை தனது தோள் மீது உட்கார வைத்து அவரது அண்ணன் வருண் தேஜ் நடன அரங்கு வரை நிஹாரிகாவை சுமந்து வந்தார். வருண் தேஜ் தோள் மீது இரண்டு கால்களையும் தூக்கிப்போட்டு ஏறி நிஹாரிகா அமர்ந்ததும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் சத்தம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வீடியோவை வருண் தேஜ் பகிர்ந்தார். இன்று இரவு நிஹாரிகா-சைதன்யா திருமணம் அதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் ஐதராபாத்தில் மற்றொரு திருமண வரவேற்பு நடத்தவும் எண்ணி உள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :