சமந்தாவிடம் தமன்னா சொல்லப்போகும் சீக்ரெட்...

எல்லோருக்குள்ளும் ஒரு சீக்ரெட் மறைந்திருக்கும். அதை சிலர் சமயம் வரும் போது வெளிப்படையாக சொல்வதுண்டு. தமன்னா மனதுக்குள் ஒளிந்திருக்கும் சீக்ரெட் என்ன?
நடிகை தமன்னா கடந்த மாதம் படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். சுமார் 3 வார சிகிச்சை மற்றும் தனிமைக்கு பிறகு அவர் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு தனது உடற் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தொடர்ந்தார்.

சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நடிகை தமன்னாவை நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். பிறகு தமன்னா பங்கேற்றிருந்த படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார். அங்குள்ள மேக்கப் அறையில் தங்கி இருந்த தமன்னாவை சமந்தா சந்தித்தார். சமந்தா ஆஹா என்ற ஒடிடி தளத்தில் டாக்‌ஷோ நடத்தி வருகிறார். பிரபலங்களை நேரில் அழைத்துவந்து அவர்களை பேட்டி காண்கிறார். இது வரை சொல்லாமல மறைத்து வைத்திருந்த சில ரகசியங்களை அவர்கள் அந்த பேட்டியில் தெரிவிக்கின்றனர். கடந்த 2 வாரத்துக்குமுன் நடிகர் ரானாவிடம் சமந்தா பேட்டி எடுத்தார்.

அப்போது ரானா, தான் சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றது பற்றி உருக்கமாக கூறினார். தனது உயிருக்கு டாக்டர்கள் கெடு வைத்தது பற்றியும் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது பற்றி கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது நிலையை கேட்டு சமந்தாவும் கண்ணீர் சிந்தினார். மேலும் சிரஞ்சீவி, நாக் அஸ்வின், சைன நேவால், விஜய் தேவரகொண்டா போன்றவர்களை சமந்தா நேர்காணல் செய்தார். அதேபோல் தமன்னாவை தனது ஷோவில் பங்கேற்க அழைத்தார். அப்போது இதுவரை வெளிவராத சில அரிய படங்களை அவரிடம் கேட்டார்.

தமன்னா அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் நேர்காணலில் விரைவில் சந்தித்து சில உண்மைகளையும் ரகசியங் களையும் பகிர்ந்துக்கொள்ள உள்ளனர். சமந்தா சமீபத்தில்தான் விடுமுறை பயணமாக கணவர் சைதன்யாவுடன் மாலத்தீவு சென்றார். அங்கு ஸ்கூபா டைவிங் மற்றும் கடல் நடுவில் உள்ள ரெண்டாரண்ட் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களில் உற்சாகமாக் ஈடுபட்டு அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். பின்னர் இந்தியா திரும்பினார். ஜனவரி மாத்தத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :