ஆர்யாவை பாராட்டிய உலக நாயகன்.. சார்பட்டா நடிகர் அளித்த பதில்..

by Chandru, Dec 10, 2020, 14:07 PM IST

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் ஒருபக்கம் கவனித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை வெளியிட்டார். மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் 4 ஷோவும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் சக நடிகர்கள் மீதும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் அவர் ஜூம் வீடியோ மூலம் விஜய் சேதுபதியிடம் கலந்துரையாடினார். கமல் இயக்கி நடிக்கும் தேவர்மகன் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ஆர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார். இது பாக்ஸிங்கை மையமாக வைத்து படமாகிறது. இதற்காக ஆர்யா தனது தோற்றத்தை பாக்ஸர்கள் போல் கட்டுமஸ்தாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன் ஆர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னர் தன்னை பாராட்டிய கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்து நன்றி சொன்னார் ஆர்யா.இது குறித்து ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது” சர்பட்டா பரம்பரை பற்றி எனக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறீர்கள் கமல் சார். இதை விட ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு இருக்காது. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள். சார்பட்டா பரம்பரை படத்திற்காக நான் செய்த வேலை குறித்து நீங்கள் கருத்து கூறியதற்கு மிகவும் மில்லியன் நன்றி. இன்றும் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு ஆர்யா கூறி உள்ளார்.

ஆர்யா தற்போது சார்பட்டா பரம்பரை தவிர டெடி படத்திலும், விஷாலுடன் எனிமி படத்திலும் நடித்து வருகிறார். எனிமி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஷாலுடன் ஆர்யா கலந்துகொண்டு நடித்தார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை. மலேசியாவில் நடக்க உள்ளது. நிஜத்தில் நெருங்கிய நண்பர்களான ஆர்யா, விஷால் இருவரும் இப்படத்தில் விரோதிகளாக நடிக்கின்றனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்