வெவ்வேறு மொழிகளில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது, இதனை சூர்யாவே தயாரிக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க உள்ளனர். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்குகிறார்.
தெலுங்கு, தமிழில் அனுஷ்கா நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன் உருவான படம் பாகமதி. இதில் அனுஷ்கா மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அனுஷ்கா நடிப்பும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை இந்தியில் துர்காமதி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அனுஷ்கா ஏற்று நடித்த வேடத்தை பூமி பெட்னகர் நடித்தார். ஜி. அசோக் இயக்கினார்.
இப்படம் வெளியாகி தோல்வி அடைந்திருக்கிறது. அனுஷாகாவின் திரை வடிவ தோற்றம் தமிழ், தெலுங்கில் பாகமதி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அத்துடன் உடன் நடித்த நடிகர்களும் வலுவான நடிகர்கள். ஆனால் இந்தியில் அனுஷ்காபோல் வேடத்தை பூமி பெட்னகரால் அந்த வேடத்தைத் தோளில் சுமக்க முடியாமல் போனதுடன் உடன் நடித்த நடிகர்களும் பெரிய அளவுக்கு உதவவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. பாகமதி படத்தை அப்படியே இயக்குனர் அசோக் இந்தியில் பிரதிபலித்திருந்தாலும் பாகமது படதிலிருந்த ஆன்மாவை இந்தியில் அவரால் கொண்டு வரமுடியவில்லை. இதுவே தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அனுஷ்கா ரசிகர்கள் அனுஷ்காவுக்கு மாற்று யாரும் கிடையாது அவர் நடித்த கதாபாத்திரத்தை வேறொரு நடிகையால் நடித்து வெற்றி பெற முடியாது என மெசேஜ் பகிர்ந்துள்ளனர்.அனுஷ்கா கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் பார்வையற்றவராக அவர் நடித்திருந்தார். அடுத்த படம் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பதை அனுஷ்கா தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார். தனக்கு வந்த இது போன்ற 3 படங்களை அவர் ஏற்கவில்லையாம். இனி வித்தியாசமான பாத்திரங்களில் ஹீரோக்கள் படங்களில் நடிக்க எண்ணி உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரைப்போலவே நடிகை காஜல் அகர்வாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை ஏற்காமல் தவிர்க்கிறாராம்.