விஜே சித்ரா தற்கொலை வழக்கில் உண்மையை ஒப்பு கொண்ட கணவர்.. நள்ளிரவில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

by Logeswari, Dec 15, 2020, 12:22 PM IST

முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது அவரது கணவரும் அதே ஹோட்டலில் தங்கி இருந்ததால் ஹேம்நாத்திடம் தொடர்ந்து ஏழு நாட்களாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மற்றும் சித்ராவின் தாய், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை நடந்தது. பிரேத பரிசோதனையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது தெள்ள தெளிவாக ரிப்போர்ட் வந்தது.

இதனால் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கண்ணோட்டத்தில் போலீஸ் விசாரணை நடத்தியது. தொடர்ந்து ஏழு நாட்களாய் போலீஸ்க்கு தண்ணி காட்டிய ஹேம்நாத் நேற்று உண்மையிலே ஹோட்டலில் என்ன நடந்தது என்பதை போலீசிடம் ஒப்பு கொண்டார். அதாவது சித்ரா பல இடங்களில் கடன் வாங்கி தான் அவரது வீட்டை கட்டினார். இதனால் தான் அவர் கிடைத்த வாய்ப்பை எதையும் தவறவிடாமல் கலந்து கொண்டு பணம் சம்பாதித்துள்ளார். சித்ராவின் தாயாருக்கு அவளது மகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஹேம்நாத்துக்கு செலவு செய்ய கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இருப்பினும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துவந்தனர். சித்ரா கடனையும் அடைக்க வேண்டும் மற்றும் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் ஹேம்நாத்திடம் இருந்து எந்த விதத்திலும் ஆதரவு கிடைக்காததால் மனம் உடைந்துள்ளார். படப்பிடிப்பில் சித்ரா மற்ற ஆணுடன் நெருங்கி நடிப்பதால் சித்ராவை இனிமேல் நடிக்க வேண்டாம் என்று ஹேம்நாத் கட்டளை போட்டுள்ளார். அதை மீறி இவர் நடிப்பதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மற்ற ஆணுடன் சேர்த்து வைத்து பேசி சந்தேகமும் அடைந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சித்ரா ஹோட்டலுக்கு வந்தவுடன் இன்றைக்கு எந்த ஆணுடன் ஆடி பாடி கொண்டிருந்தாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு சித்ரா நான் உன்னை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ஹேம்நாத் கோவப்பட்டு 'செத்து தொல' என்று கூறிவிட்டு ரூமுக்கு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸ் கூறி சித்ராவின் தற்கொலை வழக்கை மூடினர். அது மட்டும் இல்லாமல் சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய காரணமான ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை