பிற மொழி வெப் சீரிஸ் படங்கள் தமிழில் ரிலீஸ்.. ஒடிடியில் அறிமுகமாகும் புதுப்புது ஸ்டார்கள்..

by Chandru, Dec 16, 2020, 12:53 PM IST

பிற மொழியில் ஹிட் ஆன படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு முன்பெல்லாம் தியேட்டர்களில் வெளியாகும். அந்த படங்கள் இங்கும் வரவேற்பு பெறுவதுண்டு. தற்போது ஒடிடி தளங்களில் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. பிற மொழியில் உருவாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அந்த வரிசையில் நேயர்களிடம் பரலாக வரவேற்பைப் பெற்ற அமேசான் அசல் தொடர் பண்டிஷ் பண்டிட்ஸ் (Bandish Bandits), கடந்த ஆகஸ்ட் 04, 2020 அன்று வெளியிடப் பட்டது.

இத்தொடர், இந்தியா முழுவதும், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16, துவங்கி, இந்த பெரும் வெற்றி பெற்ற பிரபலமான காதல் நாடகத் தொடரான பண்டிஷ் பண்டிட்ஸ் (Bandish Bandits) இவ்விரண்டு பிராந்திய மொழிகளிலும் கிடைக்கப் பெறவுள்ளது.அமிர்த்பால் சிங் பிந்த்ரா தயாரித்து உருவாக்கிய மற்றும் ஆனந்த் திவாரி இயக்கியுள்ள இந்தத் தொடர் ஜோத்பூரை அடிப் படையாகக் கொண்டது மற்றும் பாப் மற்றும் கிளாசிக் கல் என்னும் மாறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த இரண்டு இளம் இசைக் கலைஞர்களின் கதையைச் சொல்கிறது.

இந்த பத்து பாகங்கள் கொண்ட தொடரில், இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகராக வளர்ந்து வரும் திறமையான நட்சத்திரம் ரித்விக் பெளமிக் ராதேவாகவும் மற்றும் ஷ்ரேயா சௌத்ரி பாப் நட்சத்திரமாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் நஸ்ருதீன் ஷா, அதுல் குல்கர்னி, குணால் ராய் கபூர், ஷீபா சத்தா மற்றும் ராஜேஷ் தைலாங் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் நடித்துள்ளனர்.இத்தொடரின் மூலம், இசையமைப்பாளர்கள் ஷங்கர்-எசான்-லாய் டிஜிட்டல் உலகில் அறிமுகமாகியுள்ளனர் மற்றும் சிறந்த அசல் ஒலிப்பதிவுகளை வழங்கியுள்ளனர். இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் டிசம்பர் 16 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்தியேகமாக பண்டிஸ் பண்ட்டிட் தொடரைப் பார்க்கலாம்.

கதைச்சுருக்கம்:பண்டிஸ் பண்டிட் ராதே மற்றும் தமன்னாவின் கதையாகும். ராதே, தனது தாத்தாவின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதை லட்சியமாகக் கொண்ட, இசைஞானத்துடன் பிறந்த ஒரு கலைஞராவார். தமன்னா ஒரு வளர்ந்து வரும் பாப் நட்சத்திரமாவார் மற்றும் இந்தியாவின் முதல் சர்வதேச பாப் நட்சத்திரம் ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவராவார். ராதே தமன்னாவைக் காதலிக்கத் துவங்கியவுடன் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவின் லட்சியத்தை ஈடேற்ற உதவுவதா அல்லது தனது சொந்த இசை மற்றும் குடும்ப பாரம் பரியத்தைக் காப்பாற்றுவதா என்னும் சிக்கலில், இரண்டிலும் ராதே தவறும் நிலை ஏற்பட, அனைத்தையும் இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகையில் அதில் வெற்றி பெறுகிறாரா என்பதே இதன் கதையாகும்.

வெப் தொடர்கள் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பல படங்கள் இதுபோல் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒடிடி தளங்களில் வெளியிடப்படுகிறது. தற்போதும் இதன் ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.பிற மொழி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களால் புதுப்புது ஸ்டர்கள் ரசிகர்களுக்கு அறிமுகமாகின்றனர்.

You'r reading பிற மொழி வெப் சீரிஸ் படங்கள் தமிழில் ரிலீஸ்.. ஒடிடியில் அறிமுகமாகும் புதுப்புது ஸ்டார்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை