மீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட்ட பிரபல நடிகை..

by Chandru, Dec 18, 2020, 10:11 AM IST

நடிகை விஜயசாந்தியை ஹீரோயினாக 1980ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. அதன்பிறகு நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி போன்ற ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். பிறகு முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார். 80, 90களில் தெலுங்கு ஹீரோக்கள் சிரஞ்சீவி உள்ளிட்ட எல்லா ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் படம் வெற்றிபெற்று அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அதன்பிறகு ஹீரோக்களுக்கு இணையாகப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்ததுடன் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். இந்நிலையில் விஜயசந்திக்கு அரசியலில் சேர அழைப்பு வந்தது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் நெருங்கிய நடப்பில் இருந்த விஜயசாந்தி 1998ம் ஆண்டில் பா ஜவில் இணைந்து பணியாற்றினார். சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளராக அவரை கட்சி அறிவித்தது.

பின்னர் அவர் அதிலிருந்து விலகிக்கொண்டார். 1996ம் ஆண்டு விஜய சாந்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக தமிழகத்தில் பிரசாரம் செய்தார். பின்னர் 2009ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி தல்லி தெலங்கானா என்ற தனிக் கட்சி தொடங்கினார். அதன்பிறகு அக்கட்சியை சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் இணைத்து அந்த கட்சியில் இணைந்தார். 2014ம் ஆண்டில் சந்திரசேகராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகியவர் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மீண்டும் பா.ஜவில் இணைந்தார்.

2006ம் ஆண்டிலிருந்து நடிப்பிலிருந்து விலகி இருந்த விஜய சாந்தி இந்த ஆண்டில் மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீகெவரு படத்தில் ரீ என்ட்ரி ஆனார். அப்போது பேட்டி அளித்த விஜயசாந்தி,நல்ல படங்களாக தேர்வு செய்து நடிப்பேன். பொருத்தமான கதை அமைந்தால் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பேன்” என்றார். ஆனால் தற்போது விஜயசாந்தி அப்படியே பல்டியடித்திருக்கிறார். புதிதாக அளித்த பேட்டியில்.சீரஞ்சீவுடனோ மற்ற யாருடனோ நடிக்க வேண்டும் என்று நான் ஆர்வம் காட்ட வில்லை. ஏற்கனவே அளித்த பேடியில் நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன் என்று தான் சொன்னேன். தற்போது நான் அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டிருக்கிறேன். நடிப்பில் இனி எனக்கு ஆர்வம் இல்லை என்றார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்