புத்தாண்டில் தல நடிகரின் புதிய திட்டம்.. வழக்கத்தை மாற்றுகிறார் ..

by Chandru, Dec 19, 2020, 10:06 AM IST

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு சினிமா துறை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. கடந்த 8 மாதமாகப் பொருளாதார ரீதியில் மந்த நிலை நீடித்து வருகிறது. விஜய்யின் மாஸ்டர் முதல் சிம்புவின் ஈஸ்வரன் படங்களை வரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர், டிரெய்லர் போன்றவை வெளியாகிவிட்ட நிலையில் அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் கூட வெளியாகவில்லை என்று தல ரசிகர்கள் நெட்டில் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

இதுபற்றி பட தரப்பிலிருந்து எந்த அதிகார பூர்வ தகவலும் வராதததால் அவர்களே புத்தாண்டில் வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று மெசேஜ் வெளியிட்டு அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதையடுத்து அஜீத் பி ஆர் குழு ரசிகர்களை அமைதியாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளது. 'வலிமை' தயாரிப்பாளர்கள் 2021 புத்தாண்டை பெரிய அளவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதுதான் அவர்கள் அமைதிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்காக வலிமை படத்தின் தொடர்ச்சியான அப்டேட் வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆனால் இது வழக்கமான போலீஸ் கதை கிடையாது என்கிறது படக் குழு. வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்பே தொடங்கியது. திடீரென்று ஊரடங்கு அமலானதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. சுமார் 7 மாதகாலம் ஷூட்டிங் நடக்காத நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அஜீத் மீண்டும் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது மோட்டார் பைக் சண்டைக் காட்சியில் பைக் கவிழ்ந்ததில் அஜீத்துக்குக் காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் ஒய்வும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காட்சியை முடித்துக்கொடுத்தார் . அத்துடன் 1 மாத கால ஷூட்டிங் முடிந்தது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெருங்கி இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பில், படத்தில் நடிக்கும் எல்லா நட்சத்திரங் களும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் அஜீத் வீட்டில்தான் இருப்பார். அவர்களுடன் புத்தாண்டை கொண்டாடுவார். ஆனால் இந்த முறை அவர் வீட்டில் இல்லாமல் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அஜீத் தனது வழக்கமான திட்டத்தை இதன் மூலம் மாற்றி இருக்கிறார் அதே சமயம் அவர் படப் பிடிப்பின் மீது வைத்திருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார். வலிமை படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். மேலும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோ ஸுடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கிறார்.ஏப்ரல் மாத வாக்கில் வலிமை படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

You'r reading புத்தாண்டில் தல நடிகரின் புதிய திட்டம்.. வழக்கத்தை மாற்றுகிறார் .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை