தனுஷ்-செல்வராகவன் இணைகின்றனர்.. நடிகரின் ஹாலிவுட் பட புது தகவல்கள்..

by Chandru, Dec 19, 2020, 12:27 PM IST

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 'ஜகமே தந்திரம்' வெளியீடு கொரோனா ஊரடங்கால் தாமதமாகி விட்டது, மேலும் தனுஷ் தனது அடுத்த படமான 'கர்ணன்' படப்பிடிப்பையும் முடித்துள்ளார், இது மாரி செல்வராஜ் இயக்கும் படம். ​​செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்டம் முழு வீச்சில் தொடங்க உள்ளது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கேள்வி என்னவென்றால், தனுஷ்-செல்வராகவனின் படம் 'புதுப்பேட்டை 2'ம் பாகமா அல்லது வேறு படமா என்பது தான்.

செல்வராகவன் தனுஷுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறார் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே இந்த கேள்வி எழுந்தது, அதே சமயம், தனுஷுடன் 'புதுப்பேட்டை 2' படத்திற்குத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியதால், தனுஷ் மற்றும் செல்வ ராகவன் மீண்டும் இணைவது 'புதுப்பேட்டை 2' என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.ஆனால் அவர்களின் புதிய படம் முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்காது என்றே தெரிகிறது. இருப்பினும், இருவரும் 'புதுப் பேட்டை 2' படத்திற்காக மீண்டும் இணைந்தால் அது ஒரு பிளாக்பஸ்டர் திட்டமாக இருக்கும். அதை அதிகாரப் பூர்வமாக அறிய இருவரிடமிருந்தோ அல்லது தயாரிப்பாளரிடமிருந்தோ நாம் கேட்கக் காத்திருக்க வேண்டி உள்ளது.

தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனின் இயக்கத்தில் 'காதல் கொண்டேன் ', 'புதுப் பேட்டை', மற்றும் 'மயக்கம் என்ன' படங்களில் பணியாற்றியுள்ளார், இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் அரசியல் த்ரில்லர் 'புதுப்பேட்டை' தனுஷை ஒரு வித்தியாசமான முறையில் பதிவு செய்தது, இதன் 2ம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வைத்திருக்கிறது.கார்த்திக் நரேனுடன் தனுஷ் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார், மேலும் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பின் கீழ் இயக்குனர் மித்ரன் ஜவஹ ருடன் கைகோர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கும் அறிவிப்பு வெளியானது. அப்படம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர். தி கிரேமேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரியில் படப் பிடிப்பு தொடங்குகிறது.இரண்டு சிஐஏ உளவாளிகளைச் சுற்றிச் சுழலும் கதையில் தனுஷ் உள்ளிட்டோரின் பாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக இந்த திரைப்படம் தயாராகிறது.

You'r reading தனுஷ்-செல்வராகவன் இணைகின்றனர்.. நடிகரின் ஹாலிவுட் பட புது தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை