பிரபாஸ் ஒரு குழந்தை.. ரன்வீர் சக்தி நிறைந்தவர்,, பூஜா ஹெக்டே விமர்சனம்..

by Chandru, Dec 20, 2020, 10:02 AM IST

நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். அலவைகுந்தபுரமுலு படத்தில் புட்ட பொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் அசத்தல் நடனம் ஆடி பிரபல ஆனவர் தற்போது வரிசையாக பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு ஹவுஸ்ஃபுல் 4, இந்த ஆண்டில் அலவைகுந்தபுர முலு படங்கள் மூலம் வெற்றி பெற்றார். பூஜா அடுத்ததாக ராதே ஷியாமில் பிரபாஸுடன் நடித்து வருகிறார். இத்தாலியில் இதன் ஷூட்டிங் நடந்ததுபற்றி பூஜா விளக்கினார். அவர் கூறும்போது, கடந்த அக்டோபர் மாதம் இத்தாலியில் கொரோனா தொற்று காலகட்டத்துக்கு நடுவில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பை தொடங்கினோம்.

இந்த முக்கியமான ஊரடங்கு காலங்களில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் வித்தியாசமான அனுபவம். நாங்கள் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருமுறை கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம், இதுபோன்ற கடினமான காலங்களில் ஒரு படப்பிடிப்பு ஷெடியூலை நடத்த முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார். பூஜா ஹெக்டே டிசம்பர் 25 ஆம் தேதி வரை ஐதராபாத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார். பிரபாஸுடன் ஷூட்டிங் அனுபவம் பற்றி கூறிய பூஜா, இது வேடிக்கையாகவும் குழந்தைத்தனாகவும் இருந்தது என்றார். ராதே ஷியாம் தவிர, நடிகை பூஜா ஹெக்டே முடித்து கொடுக்க முடிக்க மற்ற படங்கள் உள்ளன.

மும்பையில் சர்க்கஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அவர் முடித்து விட்டார். ரன்வீர் சிங், வருண் சர்மா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து நடித்தார். மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பூஜா. மேலும் கபி ஈத் கபி தீபாவளி படத்தில் சல்மான் கானுடன் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பூஜா கவனம் செலுத்தி வருகிறார். ரன்வீர் பற்றி பூஜா கூறும் போது, அவர் சக்தி நிறைந்த பந்து என்றும் சல்மான்கான் பற்றி கூறும்போது, ரொம்பவும் சாந்தமானவர். உண்மையானவர், அரிதானவர் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை