சிம்பு படத்தை இயக்குகிறாரா நயன்தாரா காதலர்?

by Chandru, Dec 20, 2020, 13:15 PM IST

சிம்பு நடித்த படம் போடா போடி. 2012ம் ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். நடிகை வரலட்சுமி சரத்தும் இந்த படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 8 வருடமாக காதல் ஜோடிகளாகவே வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று சுற்றுபயணம் செய்வதுடன் சில மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவனை தனி விமானத்தில் அழைத்துச் சென்ற நயன்தாரா கோவாவில் அவரது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மீண்டும் தனி விமானத்தில் சென்னை அழைத்து வந்தார்.

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இயக்குகிறார். அத்துடன் நயன்தாரா நடிக்கும் நெற்றிக் கண் என்ற படத்தையும் தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பதம்குமார் தயாரிக்கிறார். இவர்தான் முதல் பாகத்தையும் தயாரித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய ஆந்தாலஜி படமான பாவக் கதைகள் படத்தில் இடம்பெற்ற லவ் பண்ணா உட்ரணும் என்ற படத்தில் பதம்குமார் நடிகை அஞ்சலியின் தந்தையாக நடித்திருந்தார். போடா போடி 2ம் பாகத்தில் சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக ரித்திகா பால் நடிக்கிறார்.

இந்தியில் அறிமுகமாக வேண்டிய ரித்திகா பால் தமிழில் அறிமுகமாகிறார். இதற்காக 10 வருடத்துக்கும் மேலாக அவர் நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார் என்று பதம் குமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துகொடுத்து விட்டு அடுத்த வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. போடா போடி 2ம் பாகம் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்று உறுதியாகவில்லை. இதற்கிடையில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்