நான் அழுதால் அவங்களுக்கு பிடிக்காது.. சாய்பல்லவி யாரை சொல்கிறார்..

by Chandru, Dec 20, 2020, 14:44 PM IST

இதுவரை கிசுகிசுவில் சிக்காமலிருந்தவர் சாய் பல்லவி. இப்படியொரு டைட்டிலை பார்த்தவுடன் அவரும் காதலில் விழுந்துவிட்டாரா என்று கிசுகிசுக்க தொடங்கி விடுவார்கள். ஆம், அவர் காதலில்தான் விழுந்து விட்டார். அவரது அப்பா, அம்மாவை அப்படி காதலிக்கிறார். அவர்களும் சாய் பல்லவியை அப்படி காதலிக்கிறார்கள். சாய் பல்லவிக்கு சோகமான வேடங்களில் நடிக்கவே அதிகம் பிடிக்கிறதாம் அதனால் அழுகை விஷயமுள்ள கதாபாத்திரங்களை கொஞ்சம் அதிகமாகவே தேர்ந்தெடுக்கிறார். இதுபற்றி சாய்பல்லவியிடம் கேட்டபோது பதில் அளித்தார்: நான் சோகமான அழும் பாத்திரங்கள் ஏற்பதும் அல்லது இறந்துவிடுவது போன்ற காட்சிகளில் நடிப்பது என் குடும்பத்தினருக்கு பிடிக்காது. ஆனால் அதுபோன்ற காட்சிகள் வரும்போது அவர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் நான் கவனிப்பேன்.

திரையில் நான் அழுதால் அதை பார்த்துக் கொண்டிருக்கும் என் தந்தை அழுதுக் கொண்டிருப்பார். படக்காட்சியில் நான் தனியாக நடிக்கும் காட்சியாக இருந்தால் அதை மிகவும் கடினமானதாக உணர்வேன். நெருக்கமாக இருக்கும் ஒருவர் திடீரென்று உங்களை காயப்படுத்தினால் அது எவ்வளவு வலியாக இருக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். சினிமாவில் ஒரு காட்சியில் நடிப்பது நிஜவாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம்தான். சமுதய ரீதியாக மக்கள் பாதிக்கப்படுவதுபற்றி கேட்கிறார்கள். படுகா இனத்தவர்கள் வன்முறைக்குள்ளானது பற்றி அறிந்திருக்கிறேன். பலர் வெளி சமுதாயத்தில் உள்ளவர்களை மணக்க விரும்புகிறார்கள். அவர்கள் கோத்தகிரி பகுதியில் வாழ்வதில்லை. என் அம்மா, அப்பா கோவையில் வாழ்கிறார்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி அவர்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. விராட்ட பருவம் படத்தில் தீவிரவாதி வேடம் ஏற்கிறேன். இதில் அதிகமாகவே ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறேன். இது வெறும் நக்ஸலைட் பின்னணி கதை மட்டுமல்ல அதைவிட கூடுதலாக பல கதைகள் அதில் உள்ளன. இப்பட இயக்குனர் ஒரு எழுத்தாளர் ஏற்கனவே நீதி நாதி ஒகே கதா என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்திற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். சினிமாவில் என்னுடை பெயர் டைட்டிலில் எப்படி போடப்படுகிறது என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் ரானாவுடன் நடிக்கும் படத்தில் என் பெயரை முதலில் டைட்டிலில் போட வேண்டும் என்று அவர் கூறினார், நான் ஆச்சரியம் அடைந்தேன். இது உன்னுடைய படம் அப்படித்தான் டைட்டிலும் இருக்க வேண்டும் என்றார்.

நாம் சண்டை போடாத ஒன்று கிடைக்கும்போது அது நன்றாகத்தானே இருக்கும். இது இருவருக்குமான புரிதலால் ஏற்பட்டது. சில சமயம் நான் சண்டைபோட்டு பெறுவோம் ஆனால் அது அவ்வளவு மதிப்புள்ளதாக இல்லாவிட்டால் அதை குற்ற உணர்வாக எண்ணுவோம். இவ்வாறு சாய்பல்லவி கூறினார். சாய்பல்லவிக்கு தமிழில் தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை. தெலுங்கில் ரானாவுடன் விராட்ட பர்வம் படத்தில் நடிக்கிறார். இதில் ப்ரியாமணி, நிவெதா பெத்துராஜ், ஆகியோரும் நடிக்கிறார்கள். அதேபோல் நானியுடன் ஷியாம் சிங்ஹா ராய் ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர பாவக் கதைகள் வெப் தொடரில் பிரகாஷ் ராஜ் மகளாக நடித்துள்ளார். இதை வெற்றி மாறன் இயக்கி உள்ளார்.

You'r reading நான் அழுதால் அவங்களுக்கு பிடிக்காது.. சாய்பல்லவி யாரை சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை