விக்ரம்-ஷங்கர், ரஹ்மான் வாரிசுகள் இணைந்து நடிக்கிறார்கள்? ஜோடியாக சென்னை வலம் வருகிறார்கள்..

by Chandru, Dec 21, 2020, 10:41 AM IST

கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இயக்குனர் பி.வாசு மகன் ஷக்தி, கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, கஸ்தூரி ராஜா மகன் தனுஷ் தற்போது மற்றொரு மகனும் இயக்குனருமான செல்வராகவன் சாணிகாயிதம் படம் மூலம் நடிகர் ஆகி இருக்கிறார்.

நடிகர்கள் சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் விரை வில் மற்றொரு மகன் விஜய் பிரபாகரன் நடிகராக உள்ளார். சத்யராஜ் மகன் சிபி, பிரபு மகன் விக்ரம் பிரபு, பாண்டியராஜ் மகன் பிரித்வி, மயில் சாமி மகன் அன்பு, தம்பி ராமையா மகன் உமாபதி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மகன் ஜீவா, ஜித்தன் ரமேஷ், நடிகைகள் ராதா மகள் கார்த்திகா, துளசி என நட்சத்திரங்களின் வாரிசு பட்டியல் இன்னும் நீள்கிறது. தற்போது இந்த பட்டியலில் மேலும் இரண்டு வாரிசுகள் இணைவார்கள் என்று தெரிகிறது.

விக்ரம் மகன் துருவ் ஏற்கனவே ஆதித்ய வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தந்தை விக்ரம் உடன் இணைந்து நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடையில் பிரமாண்ட வெற்றிப் படங்களை அளித்த ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அமீன் ஏற்கனவே தனது தந்தைக்கு உதவியாக இசை அமைப்பில் பங்கேற்று வருகிறார். அத்துடன் பாடல்களும் பாடி வருகிறார். ஷங்கர் மகன் அர்ஜித் தந்தையின் வழியில் இயக்குனராக அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.

துருவ் விக்ரம், அர்ஹித் ஷங்கர், ஏ.ஆர் அமீன் மூவரும் ஜோடியாகச் சென்னையை வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மூவரும் உணவருந்திவிட்டு அங்கு அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது. அதைக் கண்டதும் மூவரும் ஒன்றாக படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

You'r reading விக்ரம்-ஷங்கர், ரஹ்மான் வாரிசுகள் இணைந்து நடிக்கிறார்கள்? ஜோடியாக சென்னை வலம் வருகிறார்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை