கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் காற்று வாங்கும் நடிகை.. வில்வித்தை கற்கிறார்..

by Chandru, Dec 27, 2020, 13:58 PM IST

ஐடி கம்பெனியில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் சாக்‌ஷி அகர்வால். அதை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்தார். யோகன், திருட்டு விசிடி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு நடிப்பை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்து அதற்கேற்ப தனது உடல் வாகை மாற்ற முடிவு செய்து வெயிட்போட்டிருந்த உடலை கடுமையான உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு மூலம் குறைத்து ஆச்சர்யமூட்டும் வகையில் மெலிந்தார். காலா படத்தில் ரஜினியின் மருமகள் வேடத்தில் நடித்தார். அப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் வெட்டப்பட்டன. பின்னர் வெட்டப்பட்ட அந்த காட்சிக்கான புகைப்படத்தை வெளியிட்டு மனதை தேற்றிக் கொண்டார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள், டெட்டி, அரண்மனை 3, புரவி போன்ற படங்களில் நடிக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால் கடந்த வாரங்களில் ஒரு உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டு இது போல் யாராவது செய்ய முடியுமா என்று சவால் விட்டிருந்தார். தற்போது விடுமுறை காலம் என்பதால், பல பிரபலங்கள் சுற்றுலா சென்றனர். அந்த வரிசையில் சாக்‌ஷியும் விடுமுறை பயணமாக கோவா புறப்பட்டு சென்றார். புத்தாண்டை அவர் அங்கு கொண்டாடுகிறார். நடிகை கிறிஸ்மஸ் தினத்தன்று கோவாவில் வந்து, தனது நடனம் மற்றும் ஆடம்பரமான வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அதில் "விடுமுறைகள் தொடங்குகின்றன" என்று எழுதப்பட்டிருந்தது. அவர் தனது விடுமுறையிலிருந்து தொடர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் உடையில் சுற்றித்திரியும் படங்கள், நீச்சல் உடை அணிந்து மாலை வெயில் உடலில் பட கடற்கரையில் தனியாக அமர்ந்து சூரியனை ரசிக்கும் படம் என பல குளிர்ச்சியான படங்களை பகிர்ந்து வருகிறார். புதியவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் சாக்‌ஷிக்கு உண்டு. அவர் வில்வித்தை கற்க முயற்சிக்கும் படங்களை பகிர்ந்து கொண்டார். மாலையில் வெளியில் சுற்றுவது போல மனதை தெளிவாக்குவது எதுவுமில்லை. முதல் முறையாக ஒரு புதிய திறமையைக் கற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் வில் அம்பு வித்தை பயிற்சி செய்தார். அதை படங்களாக பகிர்ந்திருக்கிறார். இதுபோல் கடந்த மாதம் முதல் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, ரகுக் ப்ரீத் சிங், சமந்தா, வேதிகா, பிரணிதா, சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி, ஹன்சிகா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் மாலத்தீவு சென்று விடுமுறையை கொண்டாடினார்கள்.

You'r reading கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் காற்று வாங்கும் நடிகை.. வில்வித்தை கற்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை