ரோட்டு கடைக்கு சென்று உணவு சாப்பிட்ட நடிகர்.. திருஷ்டி சுற்றிய சர்வர்..

by Chandru, Dec 27, 2020, 14:38 PM IST

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ரோட்டு கடைகள் பிரபலம். குறிப்பாக சில ரோட்டு கடைகளுக்கு காரில் செல்லபவர்கள் கூட காரை ஓரம் கட்டிவிட்டு வந்து சாப்பிட்டு செல்வதுண்டு. இப்படித்தான் ஐதாராபாத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக ரோட்டில் ஃபாஸ்ட் புட் கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். திடீரென்று அவர் கடைக்கு வந்து நின்றார் நடிகர் சோனு சூட். நடிகரை பார்த்ததும் கடைக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரு நிமிடம் அவரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வரவேற்றார். திடீரென்று சோனு சூட் அந்த ரோட்டு கடைக்கு வந்ததற்கு இன்னொரு காரணம் அந்த ஃபாஸ்ட் புட் கடைக்கு சோனு சூட் பெயர் வைக்கப்பட்டிருந்தது. பிறகு நடிகர், அங்கு என்னவெல்லாம் விற்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். தவாவில் உணவை புரட்டத் தொடங்கினார்.

வறுத்த அரிசி, மஞ்சூரியன், நூடுல்ஸ் போன்ற சீன உணவுகள் அங்கு தயாரித்து விற்கப்படுகிறது என்பதை அறிந்து கொஞ்சம் ருசி பார்த்தார். பிறகு அவரே சில மசாலா ஐட்டங்களை அடுப்பில் செய்தார். முன்னதாக அவருக்கு கடைக்காரர் பூசணியில் கற்பூரம் ஏற்றி வைத்து திருஷ்டி சுற்றினார். ஒரு சாதாரண சாம்பல் பச்சை நிற டீஷர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து சிம்ப்ளாக இருந்த சோனு முகமூடியும் அணிந்தார். சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா மற்றும் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடித்த அல்லுடு அதர்ஸ் ஆகிய படப்பிடிப்பில் கலந்து கொள்ள சோனூ சூட் ஐதராபாத் வந்தார். லாக்டவுன் தளர்வில் அல்லுடு ஆதர்ஸ் படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் முடித்துள்ளார்.

இதில் நபா நடேஷ், பெல்லம் கொண்டா சீனிவாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் அனு இம்மானு வேல் ஆகியோர் நடித்துள்ளனர். சோனு சூட்டுக்கு வழக்கத்தைவிட மக்கள் மத்தியில் மதிப்பு கூடி இருக்கிறது கொரோனா ஊரடங்கில் பல லட்சம் பேர்களுக்கு அவர் உதவினார். வெளியூரிலிருந்து வேலைக்காக வந்து ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்தவர்களை ஆம்னி பஸ்களிலும், ரயிலும் விமானத்திலும் அனுப்பி வைத்தார். தன்னிடம் உதவி கேட்ட பலருக்கு தயக்கமில்லாமல் உதவி வருகிறார். ஆந்திரா பகுதியில் சித்திப் பேட்டை என்ற கிராமத்தில் உள்ள மக்கள் சோனு சூட்டுக்கு கோயில் கட்டி அங்கு பெண்கள் திரண்டு ஆடிபாடி மகிழ்ந்தார்கள். இது நெட்டில் வைரலானது. சிலர் “இதற்கு சோனு தகுதியற்றவர் ” என்றனர். அப்படி சொல்பவர்கள் யாரும் சோனுவை போல் மக்களுக்கு உதவவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

You'r reading ரோட்டு கடைக்கு சென்று உணவு சாப்பிட்ட நடிகர்.. திருஷ்டி சுற்றிய சர்வர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை