பெண் தாதா கதையில் நடிக்கும் நடிகை மீது வழக்கு..

by Chandru, Dec 27, 2020, 15:00 PM IST

தாதாக்களின் கதை படமாவது அடிக்கடி நடக்கிறது. சில சமயம் நிஜ தாதாக்கள் கதைகளும் படமாகின்றன. இந்தியில் 1960களில் மும்பை அருகில் உள்ள காமத்திபுராவில் பெண் தாதாவாக வலம் வந்தவர் கங்குபாய் கத்தியாவதி. இவர் பாலியல் தொழில், டிர்க்ஸ் கடத்தல், கொலை கொள்ளை என அடாத செயல்களை அச்சமின்றி செய்து வந்தார். அந்த பகுதியையே ஆட்டிப் படைத்தவர். பிறகு பாலியல் தொழிலாயின் வாழ்க்கையை மேம்படுத்த அப்போதைய பிரதமர் ஜஹர்லால் நேருவிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இவரது வாழ்கையை ஹூசைன் ஜைதி என்பவர் மாஃபியா குயின்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகத்தின் அடிப்படையில் கங்குபாய் கத்தியாவாதி படம் உருவாகிறது.

பிரமாண்ட படங்களை வழங்கிய சஞ்சய் லீலா பன்சாலி இதனை படமாக்குகிறார். பெண் தாதாவாக முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் அவருக்கு பதிலாக அலியாபட் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தது. சாந்தனு மகேஸ்வரி, இம்ரான் ஹாஸ்மி, அஜய் தேவ்கண் போன்றவர்களுக் கவுரவ வேடத்தில் இதில் நடித்தி ருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கு பிரச்னை எழுந்துள்ளது. கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜிஷா என்பவர் சஞ்சய் லீலா பன்சாலி, அலியாபட், ஹூசைன் ஜைது ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஹூசைன் எழுதிய புத்தகத்தில் கங்குபாய் பற்றிய தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என குறிபிட்டுள்ளார். உண்மை சம்பவ படங்கள் உருவாகும்போது இதுபோன்ற பிர்சனைகள் அடிக்கடி ஏற்படுகிறது. தமிழில் நுங்கம்பாக்கத்தில் நடந்த பெண் கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் என்ற பெயரில் படம் எடுத்த போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது, அதேபோல் ரஜினி நடித்த காலா படத்துக்கும் எதிர்ப்பு வந்தது. சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி பண்டிட் குயின் படம் எடுத்த போதும் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் அலியாபட் நடிக்கிறார். இப்படத்துக்கும் ஆதிவாசிகளும் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை