வேலு நாச்சியார் படத்தில் நயன்தாரா இல்லை.. பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிப்பது யார்?

by Chandru, Dec 30, 2020, 15:06 PM IST

பிரபாஸ் நடித்த பாகுபலி, சீரஞ்சீவி நடித்த சேரா நரசிம்ம ரெட்டி, கங்கனா ரனாவத் நடித்த மணிகர்ணிகா, தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி. பிரியங்கா சோப்ரா, தீபிகா நடித்த பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்கள் பிரமாண்ட சரித்திர படங்களாக உருவாகின. அவை வெளியாகி வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் பிரிட்டீஷாரை எதிர்த்துப் போராடிய சிவகங்கை ராணி வேலு நாச்சியார் பற்றி சரித்திர படம் உருவாவதாகவும் இதில் நயன்தாரா வேலு நாச்சியாராக நடிப்பதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே சிரஞ்சீவி நடிப்பில் உருவான சேரா நரசிம்மா ரெட்டி படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும் வேலு நாச்சியார் பாத்திரம் என்பது அவரது தனித் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நயன்தாரா தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.வேலு நாச்சியார் ராணியி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் சில ஊடகங்களில் வரும் தகவலில் உண்மை இல்லை. இது வதந்தி தான். இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது அதனை உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலு நாச்சியார் படத்தை பி.சி.ஸ்ரீராம் ஏற்றிருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி கொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப் பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாகிறது.வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத் திருநாளில் தொடங்குகிறது. இது குறித்துப் படக்குழு தரப்பில், "சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-வது நினைவுநாள் டிச.25 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி, வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி திரைப்படத்திற்கான அலுவலகத்துக்குப் பூஜை போடப்பட்டது.வீரமங்கை வேலுநாச்சியாரின் கதையைத் திரைப்படமாக எடுக்க சட்டரீதியாகத் தக்க உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணி மாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட சூரிய வம்சம் ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு, தனது கேமராவால் ஜாலங்கள் செய்யும் தொழில்நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா எடிட்டிங். டி.பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார். பி ஆர் ஓ நிகில் முருகன் செயல்படுகிறார். இவர்களுடன், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணைய விருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்