அடிக்கடி கொண்டாட்டத்தில் ஈடுபடும் பிரபல ஹீரோயின்..

by Chandru, Dec 31, 2020, 10:43 AM IST

நாளை 2021 புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. 2020ம் ஆண்டு கொரோனா பாதித்த ஆண்டாக முடிந்ததில் பல இழப்புகளை மக்களும் திரையுலகினரும் சந்தித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பல திரையுலக நட்சத்திரங்கள் தயாராகிவிட்டனர். நடிகை சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன் விடுமுறை பயணமாகக் கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவு சென்று ஓரிரு வாரங்கள் தங்கி இருந்து ஜாலியாக பொழுதைக் கழித்தார்.

பிறகு ஐதராபாத் திரும்பிய அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஒரு வாரத்துக்கும் மேலாகப் படப்பிடிப்பில் பங்கேற்றவர் சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை வீட்டில் கொண்டாடினார். வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அவரே தோழிகளுடன் சேர்ந்து வடிவமைத்தார். பின்னர் கொண்டாட்ட படங்களை அவர் நெட்டில் பகிர்ந்தார். இந்நிலையில் அடுத்த கொண்டாட்டமாகப் புத்தாண்டுக்குத் தயார் ஆனார்.

கணவர் நாக சைதன்யாவுடன் கோவா புறப்பட்டார். ஐதராபாத் விமான நிலையத்துக்கு முககவசம் அணிந்துகொண்டு கணவருடன் வந்தார். கறுப்பு நிற பனியன் அதே நிறத்தில் லெகின்ஸ் அணிந்து மேலே சாம்பல் நிற ஓவர் கோட் அணிந்திருந்தார் சமந்தா. நாக சைதன்யா கிரீன் நிற கார்கோ பேண்ட் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்தார். கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடி விட்டுத் திரும்பும் சமந்தா மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். மேலும் சாம் ஜாம் என்ற ஒடிடி தளத்தில் பிரபலங் களை அழைத்து பேட்டி காணும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

மேலும் விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா, நானிம் சந்தீப் கிஷன், அக்‌ஷரா கவுடா, ராஷ்மிகா ஆகியோரும் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்றிருக்கின்றனர்.முன்னதாக நடிகர் ரன்பீர் கபூர்-அலியாபட் மற்றும் ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, நடிகை நிஹாரிகா-கணவர் சைதன்யா , சித்தார்த் மல்ஷோத்ரா-கியாரா அத்வானி ஆகியோர் ஜோடியாக புத்தாண்டு கொண்டாட மாலத்தீவு சென்றிருக்கின்றனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்