கொரோனா குணம் ஆனதும் நடிகர் சாமி தரிசனம்..

by Chandru, Dec 31, 2020, 15:25 PM IST

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை. அது உயர் பதவியில் இருப்பவர்களையும் சாதாரண ஏழை மக்களையும் தாக்கியது. சினிமா நட்சத்திரங்களை பெரும் அளவில் பாதித்தது.

அமிதாப்பச்சன் தொடங்கி ஐஸ்வர்யாராய், விஷால், கருணாஸ், நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், தமன்னா, ராம் சரண், எஸ்.எஸ். ராஜமவுலி எனப் பலரையும் கொரோனா வைரஸ் தாக்கியது. பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். இதில் அமிதாப்பச்சன் தொற்று குணம் ஆனபிறகு பிஸியாக படங்கள், விளம்பரங்கள், டிவி ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார். அதே போல் தமன்னாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இதையடுத்து அவர் காஞ்சிபுரம் கோயிலுக்கு மனைவி நடிகை ராதிகாவுடன் சென்று வழிபட்டார். அவர்கள் இருவரும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முகத்தில் மாஸ்க் அணிந்து சாமியை வழிபட்டனர். அந்த படங்கள் நெட்டில் பரவி வருகிறது .இதுகுறித்து ராதிகா தனது இனையத் தள பக்கத்தில் வெளியிட்ட மெசேஜில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்தோம். என் கணவர் நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடையப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை