காதலனுடன் நயன்தாரா கவர்ச்சி விருந்து.. புத்தாண்டில் புது நெருக்கம்..

by Chandru, Jan 1, 2021, 18:47 PM IST

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் கலந்துகொண்டு நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்தானது. இதையடுத்து நயன்தாரா ஐதராபாத்திலேயே காத்துவாக்ல ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர்- காதலன் விக்னேஷ் சிவன் உடன் சென்னை புறப்பட்டு வந்தார். பிறகு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். அடுத்த சில நாளில் தற்போது புத்தாண்டை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி இருக்கிறார்.

விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக நெருக்கமாக ஒட்டி உரசி நிற்கும் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன்தாராவுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, அனைவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மறக்கமுடியாத எதிர்பாராத ஒரு சூழலை நாம் இப்போது கடந்து வந்திருக்கிறோம். அடுத்து நாம் நல்ல நிகழ்வுகளை எதிர்கொண்டு நெஞ்சில் நிற்கும் 2021ம் ஆண்டே நோக்கி பயணத்தை தொடர்வோம் என குறிப்பிட்டிருக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்