வரும் 4ஆம் தேதி முதல் மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் படிப்படியாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் மேலும் நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து- பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியிலிருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ்.
திருச்சிராப்பள்ளியிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூர்- மங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்- மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 4 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.