சுஷாந்த் சிங் வழக்கில் நடிகை ரியா பலிகடாவா? புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்..

by Chandru, Jan 2, 2021, 12:19 PM IST

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 40க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் தந்தை போலீஸில் அளித்த ஒரு புகாரில் என் மகனுக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி அதிக போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ரியாவிடம் போலீசாரும், போதை மருந்து தடுப்புதுறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாதம் அவர் சிறையில் இருந்தபோது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரகுல் ப்ரீத் சிங். ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் போன்றவர்களிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் ஜாமீனில் வெளியில் விடக் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதுபற்றி விசாரித்த நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது.

ஒரு மாதம் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியில் வந்த ரியா மீடியாக்களிடம் பேசுவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பிறகு அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்தார், வாய்ப்புக்காக காத்திருந்தவர் தந்து புதிய படங்களை நெட்டில் வெளியிட்டார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் பாலிவுட் படத் தயாரிப்பாளர் ருமி ஜாஃப்ரே தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ரியாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ரியா நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதற்கிடையில் சுஷாந்த் வழக்கில் அரசியல் அழுத்தம் காரணமாக ரியாவை கைது செய்தனர். அவர் மீது எந்த புகாரும் நிரூபிக்கப்படவில்லை. சுஷாந்த் வழக்கில் அரசியல் செய்து ரியாவை பலிகடா ஆக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்