சக நடிகைகளை குறிவைக்கும் கங்கனா.. சினிமா கோமாளிகள் என தாக்கு..

Advertisement

நடிகை கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்ற நடிகை என்ற சொல்லப்பட்டு வந்த நிலை மாறி சர்ச்சை நடிகை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மத்தியிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடி உரிமை சட்டம் (சி ஏ ஏ) எதிராக ஜே என் யூ மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் மூண்டது போலீசார் மாணவ, மாணவிகளை தாக்கினர். இதற்கு நடிகை தீபிகா படுகோனே, டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர், அனுராக் கஷ்யப் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் கங்கானா ரனாவத் போராட்டம் நடத்திய ஜே என் யூ மாணவர்கள், ஷாகின் பாக் எதிர்ப்பாளர்களை தீவிரவாதிகள் என்று கங்கனா கடுமையாக குறிப்பிட்டார்.

தற்போது மீண்டும் கங்கனா வெளியிட்டுள்ள மெசேஜில் பாலிவுட் சக நட்சத்திரங்களை குறிவைத்து தாக்கி இருக்கிறார். தீபிகா படுகோன், டாப்ஸி பன்னு, ஸ்வாரா பாஸ்கர் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரை சினிமா கோமாளிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கங்கனா வெளியிட்ட ஒரு டிவீட்டில், ஜே.என்.யூ மாணவர்கள் சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) சட்டம் குறித்து தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்பியது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பயங்கரவாதத்தை பரப்புவதை ஒப்புக் கொண்டதாகவும் கூறி உள்ளார். மேலும் ட்வீட்டில், தீபிகா படுகோன், ஸ்வாரா பாஸ்கர், மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் ஜே.என்.யுவின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் எனக் கூறும் ஒரு டிவிட்டை மறு ட்வீட் செய்துள்ளார்.

ஜே.என்.யூ எதிர்ப்பாளர்களை ஆதரித்த பாலிவுட் நடிகர்களைக் குறிப்பிடும்போது இந்த திரைப்பட கோமாளிகள் ஜே.என்.யூ போராட்டத்தை ஆதரித்ததற்காக தேசத்திடம் மன்னிப்பு கேட்பார்களா என்று கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பினார். "ஜே.என்.யூ மாணவர்கள் சி.ஏ.ஏ பற்றி தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்பியது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் வெறுப்பு, பொய் மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவதில் பங்கேற்றதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த திரைப்பட கோமாளிகள் இந்த தேசத்திடம் மன்னிப்பு கேட்பார்களா, டெல்லியில் நடந்த கலவரத்தில் இழந்த உயிர்களுக்கு யார் ஈடு செய்வது" என குறிபிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் மீது கங்கனா கடுமையாக தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள் அவமானப்படுத்தியால்தான் சுஷாந்த் சிங் மரணம் நிகழ்ந்தது, பாலிவுட்டில் போதை கருந்து கலாச்சாரம் உள்ளது. ஸ்டார்கள் நடத்தும் இரவு பார்ட்டிகளில் இலவசமாக போதை மருந்து சப்ளை செய்யப்படுகிறது என்று சரமாரியாக புகார் தெரிவித்தார். இது தவிர மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் கங்கனா. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா. இதன் படப்பிடிப்பு முடிந்தது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>