காஜலிடமிருந்து வாய்ப்பை பறித்த நடிகை..

by Chandru, Jan 4, 2021, 14:03 PM IST

திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணத்துக்கு முன்பு வரைதான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் அம்மா. அக்கா வேடங்களுக்கத் தான் அழைக்கப்படுகின்றனர். இதனால்தான் பல நடிகைகள் 30 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வந்த மீனா, குஷ்பு போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகு அம்மா வேடங்களில் நடிக்கின்றனர். இளவட்ட ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திருமணத்துக்கு பிறகு நடித்தாலும் முன்புபோல் வாய்ப்பு வருவதில்லை. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வந்தார். கொரோனா காலகட்ட லாக்டவுனில் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் சுமார் 8 மாதம் வீட்டிலேயே முடங்கி இருந்தார் காஜல்.

அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்கனவே அவரது பெற்றோர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வீட்டுக்குள் முடங்கி இருந்த தருணத்தை பயன் படுத்திக்கொண்டனர். அவரிடம் திருமணத்துக்கு பேசி சம்மதிக்க வைத்தனர். தனது தொழில் அதிபர் பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் காஜல். அந்த வகையில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும், கமலின் இந்தியன்2 படத்திலும் நடிக்கிறார். இதுதவிர பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் தேஜா இயக்கும் அலிவேலு வெங்கட்ரமணா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் காஜல். ஏற்கனவே தேஜாவுடன் லக்‌ஷ்மி கல்யாணம், நேனே ராஜு நேனா மந்திரி மற்றும் சிடா போன்ற படங்களில் காஜல் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அலிவேலு வெங்கட்ரமணா படத்திலிருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆனது காரணமா. இயக்குனருடன் கருத்துவேறுபாடா என்று தெரியவில்லை. தற்போது அந்த வாய்ப்பு நடிகை டாப்ஸிக்கு சென்றிருக்கிறது. டாப்ஸி தற்போது இந்தியில்தான் கவனம் செலுத்தி வருகிறார். ஒட்டப் பந்தய வீராங்கனை வாழ்க்கை படத்தில் பிஸியாக நடித்து வரும் டாப்ஸி வருடத்துக்கு ஒன்றிரண்டு படம் தென்னிந்திய படத்தில் நடிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். தேஜா தனது பட ஸ்கிரிப்ட்டை ரெடியாக வைத்திருக்கிறார். எனவே அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளார்.டாப்ஸியும் பங்கேற்று நடிக்க விருக்கிறார். தேஜா இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்த சிடா படம் வெளியாகி தோல்வி அடைந்ததால் ஹீரோயின் மாற்றம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்