கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஆயிரம் ரூபாய்...

by எஸ். எம். கணபதி, Jan 4, 2021, 13:26 PM IST

கொரோனா வைரஸ் நோய்க்கான கோவிஷீல்டு தடுப்பூசி தனியாருக்கு ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா ஆட்கொல்லி தொற்று நோய், இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 3 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பரவியிருக்கிறது.
இந்நோய்க்கான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனேகா கண்டுபிடித்த தடுப்பூசி மருந்துக்கு இந்தியாவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்தை புனேயில் உள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் அடார் புனவாலா கூறுகையில், முதல் கட்டமாக இந்த தடுப்பூசி மருந்து ஒரு வைரல் ரூ.200க்கு மத்திய அரசுக்கு விற்பனை செய்யப்படும்.

மத்திய அரசுக்கு 10 கோடி வைரல் சப்ளை செய்யப்படும். அதன்பிறகு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1000 என்ற விலையில் விற்கப்படும். இந்தியாவில் அதிக மக்கள்தொகை உள்ளதால், தற்போதைக்கு இந்த தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டவுடன், அதிலிருந்து ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் மாநிலங்களுக்கு தடுப்பூசி மருந்து சப்ளை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

You'r reading கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஆயிரம் ரூபாய்... Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை