ஓடிடி ஷோவை திடீரென்று முடித்துக்கொண்ட சமந்தா? அதிக சம்பளம் கேட்டாரா?

by Chandru, Jan 5, 2021, 11:05 AM IST

நடிகை சமந்தா நாக சைதன்யாவை மணந்தார். திருமணத்து பிறகும் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு படங்கள் வருவது குறைந்திருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்த யூ டர்ன், 96 ரீமேக் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் ஒடிடி தளம் ஒன்றில் டாக் ஷோ நடத்த ஒப்புக்கொண்டார். 10 எபிசோட் நடத்தினால் ஒன்றரை கோடி சம்பளம் என்று பேசப்பட்டதாம். ஒரு ஷோ நடத்தினால் 15 லட்சம் பெறுவார். இந்த ஷோவில் பிரபல நடிகர், நடிகைகளை அவர் அழைத்து பேட்டி கண்டு வந்தார். நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய தேவர கொண்டா, ரானா, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங். நாக சைதன்யா ஆகியோரை நேரில் அழைத்து வந்து பேட்டி கண்டு வந்தார். அப்போது ரானா தனக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றிய தகவலை உருக்கமாக பகிர்ந்துக்கொண்டார். இந்த சிகிச்சை செய்யாவிட்டால் தான் இறந்துவிடுவேன் என்று டாக்டர்கள் எச்சரித்தனர் என தெரிவித்தார்.

நடிகை தமன்னா பங்கேற்றபோது, நீங்கள் முத்தம் கொடுத்து நடிப்பதில்லை அப்படி முத்தம் கொடுத்து நடிக்க ஆசைப்பட்டால் யாருக்கு தருவீர்கள் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தருவேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். அதேபோல் சிரஞ்சீவியிடம் அரசியலில் மீண்டும் ஈடுபடுவது, நடிகை ரகுல் ப்ரீத்திடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களா வாங்கித் தந்தது யார் என்பது போன்ற சிக்கலான கேள்விகள் கேட்டு பதில் பெற்று பரபரப்பாக்கினார். இது போல் 10 பிரபலங்களிடம் அவர் நேர்காணல் நடத்த வேண்டும் கடைசியாக பிரபாஸிடம் பேட்டி காண வேண்டும் என்று பேச்சப்பட்டிருந்ததாம் ஆனால் 8வது எபிசோடிலேயெ அந்த ஷோ முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு பல காரணம் கூறப்படுகிறது. பிரபல நடசத்திரங்களை நிகழ்ச்சிக்கு அழைத்துவருவது கடிமான காரியமாக உள்ளதாம். தவிர சமந்தா தனது சம்பளத்தை அதிகரித்து கேட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் இன்னொரு சீசனில் இந்த நிகழ்ச்சி தொடரும் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இதில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் குணசேகரன் இயக்கும் சாகுந்தலம் என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சமந்தா கொரோனா கால கட்டத்தில் சமந்தா வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டார். கிரியா யோகா, பேஷன் டிசைனிங், ஆரோக்கிய உணவு சமையல் போன்றவற்றை பயின்றார். தற்போது பேஷன் டிசைனிங் வர்த்தகமும் தொடங்கி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் கடந்த மாதம் கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவு சென்று அங்கு சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்தார். புத்தாண்டில் அவர் கோவாவிற்கு சென்று கணவருடன் புத்தாண்டு கொண்டாடினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை