தனுஷுடன் 10 ஆண்டுக்கு பிறகு இணையும் கூட்டணி.. யார் அவர்கள் தெரியுமா?

by Chandru, Jan 5, 2021, 14:36 PM IST

செல்வராகவன் இயக்கிய முதல்படமான காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். அதன்பிறகு புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு வெளி இயக்குனர் படங்களில் நடிப்பதில் தனுஷ் கவனத்தை திருப்பினார். வெற்றி மாறன், பூபதி பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்கள் படங்களில் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப வித்தியாசமான வேடங்களில் நடித்தார் தனுஷ். தனுஷ் படங்களுக்கு வைக்கப்பட்ட டைட்டில்கள் சில சமயம் சிக்கலில் சிக்கியது. திருவிளையாடல் என்று அவர் படத்துக்கு டைட்டில் வைத்த போது சிவாஜி மன்றத்தினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். அதன் பிறகு அந்த டைட்டில் திருவிளையாடல் ஆரம்பம் என வைக்கப்பட்டது.

அதே போல் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு கர்ணன் என பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கும் சிவாஜி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இப்படம் முடிந்தும் திரைக்கு வராமலிருக்கிறது. பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் மாஸ்டர், சிம்பு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெகமே தந்திரம் பட ரிலீஸ் பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அட்ரங்கிரே என்ற இந்தி படமொன்றிலும் தனுஷ் நடிக்கிறார். மேலும் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்கிறார். தனுஷின் 43வது படமாக இது உருவாகவிருக்கிறது.

இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். தனுஷ் தனது 44 வது படத்தில் அனிருத் இசையில் நடிக்க உள்ளார். தனுஷைப்போலவே செல்வராகவனும் வேறு ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கி வந்தார். சூர்யா, கார்த்தி, ஆர்யா போன்ற பிரபல ஹீரோக்கள் நடித்தனர். இந்நிலையில் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடிகராகவும் மாறி இருக்கிறார் செல்வராகவன். இதில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தனுஷ் ரசிகர்கள் செல்வராகவனை பார்க்கும்போதெல்லாம் புதுபேட்டை 2 படத்தை எப்போது இயக்குவீர்கள் என்று கேட்ட வண்ணம் இருக்கின்றனர். அவரும் புதுபேட்டை 2 ஸ்கிரிப்ட் தயார் ஆனதும் அப்படம் உருவாகும் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் தடாலடியாக தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் இயக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதன் முதல் பாகத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் நட்சத்திரங்கள் மாறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படம் மூலம் தனுஷ் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுக்கு பிறகு இணைய உள்ளது. பிரம்மாண்ட செலவில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். 2024ம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்துக்கான போட்டோ ஷூட் தொடங்கி நடக்கிறது என செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், மீண்டும் எனது உலகிற்கு தி ரும்பிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை