டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

by Loganathan, Jan 5, 2021, 14:27 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Stipendiary Trainees Category-I, Stipendiary Trainees Category-II, Technician/B – Boiler Attendant, Work Assistant/A

மொத்த பணியிடங்கள்: 60

கல்வி தகுதி: வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ துறையில் இயந்திரவியல், மின்னணுவியல், Electrical Instrumentation, Electronic Communication, Instrumentation & control போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.10,500/- முதல் ரூ.21,700/- வரை

வயது: 18 முதல் 24 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணைய முகவரி மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://recruit.barc.gov.in/barcrecruit/

https://tamil.thesubeditor.com/media/2021/01/notification_no_336.pdf

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்