சத்தமில்லால் ஷூட்டிங் தொடங்கிய ஐஸ்வர்யாராய்..

by Chandru, Jan 6, 2021, 09:49 AM IST

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் ரஜினியுடன் எந்திரன், பிரசாந்துடன் ஜீன்ஸ், மம்மூட்டி அஜீத்குமாருடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இருவர், விக்ரமுடன் ராவண் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டு பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. கடந்த 9 மாதமாக படபிடிப்பு தொடங்கப்படவில்லை.

ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்க மணிரத்னம் திட்டமிட்டார். ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதில் குணம் அடைந்தவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து மணிரத்தனம் ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க முடிவானது. அதன்படி ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சத்தமில்லாமல் இன்று தொடங்கி உள்ளது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. இதில் ஐஸ்வர்யராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரத்தில் சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் காட்சிகள் பிரமாண்டமான அரண்மனை அரங்கில் படமாக உள்ளது. பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகிறது. நகரத்து பின்னணியிலான படங்களையே இதுவரை மணிரத்னம் இயக்கி வந்தார். முதன் முறையாக சரித்திர படம் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை