ராக்கெட் வேகத்தில் பறக்கும் ஹீரோக்கள்..

Advertisement

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்புக்கள் தொடங்கியதையடுத்து இளவட்ட ஹீரோக்கள் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். சுமார் ஒன்றரை வருடம் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிம்பு கொரோனா லாக்டவுன் தளர்வில் உடல் எடையை முறைத்து 28 நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்தி ருக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருகிறது. இதற்கிடையில் மேலும் சுசீந்திரன் இயக்கும் உள்ளிட்ட 3 இயக்குனர்கள் படங்களில் இந்த ஆண்டு நடிக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் தனுஷ் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்ரங்கிரே படத்தில் நடித்தார். இதற்காக ஆக்ரா சென்று தாஜ்மகாலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கர்ணன் படத்தில் நடித்தார். அடுத்த கட்டமாக அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். டி43 என தற்காலிக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியது. இதில் ஸ்மிருதி ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக தனுஷ் ஒரு பாடல் பாடி இருக்கிறார். அந்த பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இதுபற்றி வெளியிட்ட மெசேஜில், 'டி 43 பாடல் படப்பிடிப்பு தொடங்குகியது. விவேக் எழுதிய பாடலை தனுஷ் பாடி உள்ளார்.

இதற்கான நடன காட்சிகள் ஸ்டைலாக அமைக்கப்பட்டுள்ளன என்றார். தனுஷ் மேலும் செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் கார்த்தி நடித்திருந்தார். பருத்திவீரனில் அறிமுகமான கார்த்தி தனது இரண்டாவது படமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். ஆயிரத்தில் ஒருவன் 2 ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் செல்வராகவன் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ஸ்கிரிப்ட் எழுத்துவது மிகவும் கடினம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுக்குறித்து அவர் , ஒரு ஸ்கிபட் எழுதும்போது எந்த பாத்திரம் பற்றி எழுதுகிறோமோ அந்த பாத்திரமாக மாற வேண்டி உள்ளது.

இதற்காக நிறைய உழைப்பும், செயல்பாடும் செலவிட வேண்டும். நான் ஒரு காட்சியை முழுமையாக்க ஆயிரம் பக்கங்களுக்கு திரும்ப திரும்ப எழுதுவேன். எழுதுவது மிகவும் கடினம் என்றார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதற்கிடையில் செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரில்லர் படமான இதில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார். சிம்பு, தனுஷ், செல்வராகவன் தவிர நடிகர் ஆர்யா பா. ரஞ்சித் இயக்கத்தில் சால்பட்டா பரம்பரை, மற்றும் விஷாலுடன் எனிமி படங்களில் நடிக்கிறார், நடிகர் பிரசாந்த் இந்தியிலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் அந்தகன் படத்தில் நடிக்கிறார். இப்படி பல நடிகர்கள் பிஸியாக கோலிவுட்டில் ராக்கெட் வேகத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்று வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>