அடுக்கு மொழி இயக்குனர், கவர்ச்சி நாயகிக்கு கொரோனா..

by Chandru, Jan 13, 2021, 14:26 PM IST

கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனாவின் ஆட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை கொரோனா தொற்றுக்கு பல நடிகர், நடிகைகள் உள்ளாகினர். அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். வானம் பட இயக்குனர் கிரிஷ் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்த பனிதா சந்த் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே போல் நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தற்போது குணம் அடைந்துள்ளனர். தொற்று குணம் ஆனவர்களில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கின்றனர். ராம் சரண், வருண் தேஜ் விரைவில் குணம் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளனர். ரஜினிகாந்த் கடந்த மாதம் 9 மாத இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். நாள் ஒன்றுக்கு 16 மணிநேரம் அவர் நடித்த வந்த நிலையில் ஷுட்டிங்கில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் அவரை டாக்டர்கள் ஒய்வில் இருக்க அறிவுரை வழங்கி உள்ளனர். உடல்நிலை கருதி அரசியலுக்கு வருவதையும் தவிர்த்துவிட்டார். இந்நிலையில் அடுக்கு மொழி இயக்குனர் டி.ராஜேந்தர்.

அவரது மனைவி உஷா ராஜேந்தர் இருவரும் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் 15 நாட்கள் அனுமதியாகி சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். இதுபற்றி அவர் டி.ராஜேந்தர் கூறும்போது, கோவிட் 19க்கு ஆளாகி நானும் என் மனைவியும் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றோம். குணமாகி வீடு திரும்பிய பிறகு எங்கும் செல்லாமலிருக்கிறேன் என்றார். தற்போது கவர்ச்சி ஹீரோயின் ராய் லட்சுமி கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனை செய்ததில் லேசான தொற்று அறிகுறி இருந்ததாம். பிறகு தனிமைப் படுத்திக்கொண்டி சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது குணம் அடைந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ராய் லட்சுமி ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், காலம் மாறி விட்டது. அனைவரும் பாசிடிவுக்கு பதில் நெகடிவ்தான் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ராய் லட்சுமி தற்போது சிண்ட்ரில்லா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

You'r reading அடுக்கு மொழி இயக்குனர், கவர்ச்சி நாயகிக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை