மாஸ்டர் படம் முதல்காட்சி பார்த்த சிம்பு பட இயக்குனர்..

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் கோலாகலத்திற்கு தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் “ஈஸ்வரன்” பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது: ஈஸ்வரன் படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானது தான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம். அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்த போது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன்.

ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது எனக்கு நான்காவது படம். அவருடன் பணியாற்றும் போது எப்போதும் பிரமிப்பாகவே இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுனால் வேகமாக ஓடிக்கிட்டு இருப்பேன். படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் குறிக்கோள்.

ரசிகர்களுக்கு பிடிக்கும் படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு சுசீந்திரன் கூறினார். மாதவ் மீடியா தயாரித்திருக்கும் “ஈஸ்வரன்” படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். சிம்பு, நித்தி அகர்வால் நாயகன் நாயகியாக நடிக்க பாரதிராஜா, ஸ்டன் சிவா மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 14,2021 உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று வெளியானது. சிம்புவின் ஈஸ்வரன் நாளை வெளியாகிறது. ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் இன்று காலை மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தார். தியேட்டர் அருகிலிருந்து செல்ஃபி படம் எடுத்து அவர் பகிர்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :