ஆஸ்கர் நாயகன் மீண்டும் ஹாலிவுட் செல்கிறார்..

Advertisement

ரோஜா படம் மூலம் 1992ம் ஆண்டில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹீட் ஆனதுடன் தேசிய விருதும் வென்றது. முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு அவரது வளர்ச்சி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்டுக்கு அவரை அழைத்துச்சென்றது. ஸ்லம் டாக் மில்லினர் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைத்தார்.

அதற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். இப்படத்தை டேனி போயல் இயக்கி இருந்தார். பின்னர் ரஹ்மான் பயணம் ஹாலிவுட்டிலேயே பல காலம் தொடர்ந்தது. நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தி பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்தார். இந்நிலையில் அவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஹாலிவுட்டில் பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் இந்தியப் படங்களில் கவனம் செலுத்தினார். தாய் அருகில் இருப்பதை அவர் விரும்பியதால் வெளிநாட்டுப் படங்கள் ஏற்பதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில் பாலிவுட்டில் ரஹ்மான் பெரிய அளவில் வரவேற்கப்பட்டதால் அங்குள்ள சிலர் அவரது வளர்ச்சியைத் தடுக்க திட்டமிட்டனர்.

ரஹ்மானை இந்தி படங்களில் ஒப்பந்தம் செய்ய எண்ணிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை தடுத்து பாலிவுட் இசை அமைப்பாளர்களுக்கு அந்த வாய்ப்புகளை திருப்பி விட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் சிலரால் ஓரம்கட்டப்பட்டது போல் ரஹ்மானும் ஓரங்கட்டப்பட்டார். இதை வெளிப்படையாக ரஹ்மானே தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தியில் ரஹ்மான் இசையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்ததில் பேச்சரா படம் வெளியானது. இது ஒடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.ஷிகரா என்ற பெயரில் விது வினோத் சோப்ரா இயக்கும் மற்றொரு இந்தி படத்துக்கும் பிறகு ரஹ்மான் தானே சொந்தமாகத் தயாரிக்கும் 99 சாங்கஸ் படத்துக்கும் இந்தியில் இசை அமைக்கிறார். மேலும் விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படங்களுக்கும் லி முஸ்க் என்ற பெயரில் அவரே இயக்கும் என்ற ஆங்கில படத்துக்கும் இசை அமைக்கிறார். இதெல்லாம் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்கள்.

இந்த ஆண்டில் தனுஷ் நடிக்கும் அட்ரங்கி ரே இந்தி படத்துக்கும், மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ஆர்,எஸ்.வம்சி இயக்கும் மஹாவிர் கமா படங்களுக்கும் இசை அமைக்கிறார். கடந்த 8 வருடமாக ரஹ்மான் தாயார் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் உலக டூர்களை தவிர்த்து வந்தார் ரஹ்மான. கடந்த டிசம்பர் 28ம் தேதி ரஹ்மான் தாயார் கரீமா பேகம் காலமானார்.தற்போது அமெரிக்க மீடியா ஒன்று ரஹ்மான் மீண்டும் ஹாலிவுட்டுக்கு திரும்ப உள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>