தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டருக்கு நடிகை பாராட்டு..

by Chandru, Jan 17, 2021, 09:32 AM IST

கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. வர்த்தகம், தொழில் துறை, திரைத்துறை எல்லாம் முடங்கின பல லட்சம் பேர் வேலை இழந்தனர். இந்நிலையில் பல நாடுகள் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மருத்து கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அந்த மருந்தை மக்கள் பயனுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசி இயக்கத்தின் முதல் கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து ஊசி போடப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

துப்புரவுத் தொழிலாளி மனிஷ்குமாருக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலம் தேசிய தலைநகரான டெல்லியில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது, இதனால் அவர் நாட்டிலேயே முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஆவார். மனீஷ்குமாருக்குப் பிறகு, அகில இந்திய மருத்துவ நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தடுப்பூசியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் போட்டுக் கொண்டார். அவர்களின் இந்த செயல்பாட்டுக்கு நடிகை கங்கனான ரனாவத் பாராட்டு தெரிவித்தார். பாலிவுட் நடிகை கங்கனானாவத், எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரன்தீப் குலேரியா தடுப்பூசி எடுத்துக் கொண்டது குறித்து கூறும்போது, இந்த தடுப்பூசி மூலம் நாட்டின் பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் முயற்சியாகும் என்றார்.
அவர் தனது ட்விட்டர் குலேரியா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அது மிகவும் ஊக்கம் அளிப்பதாகும், அற்புதம் என்றார். கைகளை கட்டிய ஈமோஜி வெளியிட்டார். நடிகை கங்கனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

சமீபத்தில் மத உணர்வை தூண்டி இரு மதத்தினருக்கிடையே மோதல் ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகை அதுகுறித்து விளக்கம் அளித்தார். சர்ச்சையில் நடிகை கங்கனா அவ்வப்போது கொரோனா சேவைக்கு பாராட்டும் தெரிவித்து வருகிறார். கொரோனா தலைநகர் டெல்லியில் 11 மாவட்டங்களில் 81 தடுப்பூசி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாத நிலையில் இந்தியாவில் பல லட்சம்பேர் இந்த நோய் பாதிப்புக்குள்ளாயினர். திரையுலகில் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், டாக்டர் ராஜசேகர், ராம் சரண், வருண் தேஜ், கருணாஸ், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா அர்ஜூன் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.

You'r reading தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டருக்கு நடிகை பாராட்டு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை