நடிகரின் மகள் திருமண விழாவில் ஆட்டம் போட்ட பிரபல ஹீரோ..

Advertisement

தமிழில் மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, வசந்த கால பறவை, மரிக்கொழுந்து, புதிய தென்றல், ரிதம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். இவர் தமிழில் கமல் ஹசன் நடித்த உத்தம வில்லன் படத்தை இயக்கினார். அதே போல் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். கன்னடத்தில் பல படங்களில் நடித்ததுடன் ஆக்ஸிடண்ட், வெங்கடா இன் சங்கடா, சுந்தரங்கா ஜானா பட்டர்ஃபிளை எனப் பல படங்களை இயக்கி உள்ளார். இவரது மகள் நிஹாரிக்காவுக்கும், நீண்ட நாள் ஃபாய் பிரண்ட் அக்‌ஷய்க்கும் பெங்களுருவில் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இதில் நடிகர்கள் சுதீப், கேஜிஎப் ஸ்டார் யஷ், நடிகை சுமலதா உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.சுதீப் தமிழில் விஜய் நடித்த புலி, நானி நடித்த நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் தற்போது பிரபல ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கே ஜி எஃப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் யஷ். அடுத்து கே ஜி எஃப்2 படத்தில் நடித்திருக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். பிரசாந்த் நீல் டைரக்டு செய்திருக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் மகள் திருமண விழா வரவேற்பில் சுதீப், யஷ் கலந்துகொண்ட போது அவர்களை ரமேஷ் நடனம் ஆட அழைத்தார். முதலில் யஷ் தயங்கியநிலையில் ரமேஷ் அரவிந்த் நடன அசைவை சொல்லித்தர யஷ் சில நடன அசைவுகள் ஆடினார். மேலும் ஆடச் சொன்ன போது கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதேபோல் சுதீப்பும் ரமேஷு டன் இணைந்து நடனம் ஆடினார். இவர்கள் நடனம் ஆடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு மகள் நிஹாரிகா-சைதன்யா திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண், வருண் தேஜ் கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள். அந்த படங்கள் வைரலானது. திருமணத்துக்குப் பிறகு நிஹாரிகா தேனிலவுக்காக கணவருடன் மாலத்தீவு சென்றார். அங்கிருந்து திரும்பிய பிறகு வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>