கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கின்றனர். இதில் சில ஜோடிகள் இன்னமும் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா-சைதன்யா, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய், ஆரியா-சாயிஷா, ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, பஹத் பாசில்-நஸ்ரியா, ரிதேஷ்முக்-ஜெனிலியா இப்படி இன்னும் ஜோடிகள் உள்ளனர். தம்பதிகளாக இவர்கள் இணைந்து வாழ்ந்தாலும் இவர்களில் சிலர் தொழில் என்று வந்து விட்டால் ஒருவரையொருவர் கலந்தாலோசிப்பது சந்தேகம் தான். தங்கள் இஷ்டப்படி தங்களுக்குப் பிடித்த பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறார்கள்.
நடிகை சமந்தா சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் துணிச்சலான வேடத்தில் நடித்தார். இந்த பாத்திரத்தில் நடிக்க சில நடிகைகள் தயக்கம் காட்டினர். இதில் நடிப்பதுபற்றி அறிந்து கணவர் சைதன்யா ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் அதை சமந்தா ஏற்கவில்லை. குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்தார். இந்தி விஷயத்தில் தீபிகா படுகோனே என்ன நிலைப் பாடு கொண்டிருக்கிறார். படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன் அதுபற்றி கணவர் ரன்வீர் சிங்குடன் ஆலோசிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது அந்த சீக்ரெட் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அவர் கூறும்போது.ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் போது அந்த கதாபாத்திரம் எத்தகையது. அதில் நடிப்பதால் ஏற்படும் விளைவுகள் போன்ற பல அம்சங்கள் உள்ளன. என்னைப்பொறுத்தவரை எந்தவொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் அதுபற்றி ரன்வீரிடம் ஆலோசிப்பேன். இருவரும் இணைந்தே சுமூகமாக அந்த வேடத்தில் நடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வோம் என்றார்.தீபிகா படுகோனே பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்தும் கருத்து வெளியிடுகிறார். இதனால் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.
பத்மாவதி படம் நடிக்கும் போதும் , டெல்லியில் நடந்த கலவரத்தை எடுத்து அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியபோதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதற்கும் தீபிகாவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதை விவகாரத்தில் ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலத்தின்படி தீபிகாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து துணையாக நின்று குரல் கொடுத்தார். இதில் இருவருக்குமான புரிதலின் வலிமை தெரியவந்தது.