இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்.
மேலும் இப்படத்தின் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவரும் பயிற்சியின் போது காயம் அடைந்தனர். இதனாலும் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எல்லாம் முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் படப் பிடிப்பு தொடங்கி 50 நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் மகாராஷ்டிரா சென்ற படக்குழு அங்குள்ள மஹா பலேஸ்வர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது. அதனை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினர்.ஆர் ஆர் ஆர் படத்தில் இந்தி நடிகை அலியாபட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டு இருந்தது.
இதற்கிடையில் இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலையின்போது அலியாபட் அவரை அவமானப்படுத்தியாக புகார் எழுந்தது. இதில் கோபம் அடைந்த ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து அவரை நீக்கும்படி குரல் எழுப்பினார். அதை ராஜமவுலி ஏற்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முன் அலியாபட் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக இருந்தது. அப்போது இப்படத்தின் டீஸரில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி வைத்து நடித்ததற்கு ஆதிவாசிகளும். பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் ராஜமவுலியை தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுபோன்ற பிரச்சனையால் ஆலியாபட் படப்பிடிப்பு தள்ளிப்போனது.பிரச்சனைகள் அமைதியான சூழலில் அலியாபட் ஒருவழியாக படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத்துக்கு வந்தார். ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் ஜோடியாகச் சீதா என்ற கதாபாத்திரத்தில் அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என் டி ஆர் கோமரம் பீம் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.அலியா பட் நடித்த காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்த நிலையில் ஜனவரியில் மீ்ண்டும் ராம்சரணுடன் படமாக்கத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ராம் சரண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். 2 வார ஓய்வுக்குப் பிறகு அவர் குணம் அடைந்தார். தற்போது படப் பிடிப்புக்கு தயாராகிவிட்டார். இதையடுத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாவதாக ராஜமவுலி இரண்டு கைகள் இணைவதுபோன்ற படம் வெளியிட்டுத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளிட்ட மெசேஜில், கிளைமாக்ஸ் ஷூட்டிங் தொடங்கியது. ராமராஜு மற்றும் பீம் இருவரும் என்ன நினைத்தார்களோ அதைச் சாதிப்பதற்காக ஒன்றாக இணைகிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். டபுள் ஹீரோ படங்களில் இரு ஹீரோக்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது வழக்கம் ஆனால் இப்படத்தில் இரண்டு ஹீரோக்களும் கைகோர்த்திருப்பது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.ஆர் ஆர் ஆர் படத்துக்குக் கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் தேவ்கன், அலியாபட் , ஒலிவியா மோரிஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.