நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்து கடந்த 6 நாட்களில் 150 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர் படம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தீபாவளி தினத்தில் மாஸ்டர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி என்று அரசு உத்தரவிட்டிருந்தால் மாஸ்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதே போல் விஜய் தமிழக முதல் வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதையேற்று நூறு சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐகோட்டிலும் நூறு சதவீத டிக்கெட் அனுமதி எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி என்று அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அறிவித்தபடி மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. எல்லா இடங்களில் படம் வெற்றிபெற்று வசூலை குவித்தது. 50 சதவீத டிக்கெட் அனுமதி என்றாலும் 6 நாளில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.விஜய் அடுத்து தனது 65வது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். பூஜா ஹெக் டே ஏற்கனவே தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்தவர் .
தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து அல வைகுந்த புரமலோ படத்தில் நடித்தார். அதில் அவருடன் இணைந்து புட்ட பொம்மா.. பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடி பிரபலமானார். அடுத்த பிரபாஸ் உடன் ராதே ஷயாம் படத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.2012ம் ஆண்டு முகமூடி படத்தில் தமிழில் நடித்த பூஜா ஹெக்டே 9 வருடத்துக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.