விஜய் பட தயாரிப்பாளர் ரூ 25 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்.. டிஜிட்டல் நிறுவனத்துக்கு அனுப்பினார்..

Advertisement

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. 'மாஸ்டர்' படம். கொரோனா 'தொற்று பரவல் ஊரடங்கு தளர்வில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள், 50 சதவீத டிக்கெட் அனுமதி எனப் பல தடங்கல்களைத் தாண்டி படத்தை வெளியிடப்பட்டது. பல படங்கள் ஒடிடியில் வெளியான நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்காகப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களை பெற்றது.மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று வசூல் அள்ளி வருகிறது. ஆனால் பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்தன. இது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதுகுறித்து அப்போது மெசேஜ் பகிர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படத்தை தியேட்டரில் பாருங்கள் நெட்டில் கசிந்த காட்சிகளை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என்று கேட்டிருந்தார்.தற்போது படத் தரப்பு சட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சட்டவிரோதமாகக் கசிந்த காட்சிகளுக்கு இழப்பீடு கோருகிறார். புகழ்பெற்ற டிஜிட்டல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியரால் 'மாஸ்டர்' படத்தின் சில காட்சிகள் லீக் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது.

திரைப்பட பிரதியை வெளிநாடுகளுக்கு மாற்றி அனுப்பிய பதிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் அந்த நபரைக் கண்டுபிடித்தனர் மற்றும் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஊழியர் மீது போலீஸ் புகார் தரப்பட்டது. தற்போது, ​செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் 'மாஸ்டர்' இணை தயாரிப்பாளர் லலித் குமார் ரூ25 கோடி இழப்பீடு கோரி தனியார் டிஜிட்டல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்து கடந்த 6 நாட்களில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர் படம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து தீபாவளி தினத்தில் மாஸ்டர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி என்று அரசு உத்தரவிட்டிருந்தால் மாஸ்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதே போல் விஜய் தமிழக முதல் வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதையேற்று நூறு சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐகோட்டிலும் நூறு சதவீத டிக்கெட் அனுமதி எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி என்று அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அறிவித்தபடி மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. எல்லா இடங்களில் படம் வெற்றிபெற்று வசூலைக் குவித்தது. 50 சதவீத டிக்கெட் அனுமதி என்றாலும் 6 நாளில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வசூல் தொடர்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>