ஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..

Advertisement

கொரோனா காலகட்ட லாக் டவுனுக்கு படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியில் பிரபல நடிகர் ஷாருக்கான் 2 வருட இடைவெளிக்குப் பிறகு படத்தில் நடிக்கிறார். அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வந்த நிலையில் சீரோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் அனுஷ்கா சர்மா ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனந்த் எல் ராய் இயக்கினார்.

இப்படம் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதில் ஷாருக்கான் அப்செட் ஆனார். இதையடுத்து அடுத்த 2 வருடம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த சமயத்தில் தான் ஷாருக்கான் கோலிவுட் இயக்குனர்கள் அட்லி, வெற்றிமாறன் ஆகியோரை அழைத்துக் கதை கேட்டார். யார் படத்தில் ஷாருக் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. வெற்றிமாறன் வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டிருந்தார். அதேபோல் அட்லி, விஜய் நடித்த தெறி, பிகில் போன்ற படங்களை வெற்றிப் படங்களாக தந்திருந்தார்.

பெரும்பாலும் அட்லி படத்தில் ஷாருக் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்தி பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த்துக்கு எதிர்பாராத விதமாக கால்ஷீட் கொடுத்தார் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் ஏற்கனவே சலாம் நமஸ்தே, அஞ்சனா அஞ்சானி, வார் படங்களை இயக்கியவர்.பதான் படத்தில் ஷாருக்குடன் தீபிகா படுகேனே, டிம்பிள் கபாடியா நடிக்கின்றனர். மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷாருக்கான் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் சித்தார்த் ஆனந்துக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டது. படப் பிடிப்பு தளத்துக்குள் செல் போன் பேசக்கூடாது என்ற விதி வகைப்பட்டது. ஆனால் அதை மீறி உதவி இயக்குனர் செல்போன் எடுத்துவஃது பேசினார். அதை இயக்குனர் தட்டிகேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டது.

பிறகு அடுத்த வேலை கவனிக்கச் சென்றார் சிதார்த். ஆனால் உதவி இயக்குனர் சித்தார்த்தைக் கெட்ட வார்தையில் திட்டினார். இது அவரது காதுக்குச் சென்றது. அவர் கோபமாக வந்து உதை இயக்குனர் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குனர் பதிலுக்கு சித்தார்த்தைக் கன்னத்தில் அரைந்தார். இது கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டார்கள். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அறிந்து ஷாருக்கான் டென்ஷன் ஆனார். 2 வருடத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கும் நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதால் மன வருத்தம் அடைந்தார். இப்படத்தைத் தயாரிக்கும் ஆதித்யா சோப்ரா இதுகுறித்து விசாரணை நடத்த அலுவலக நிர்வாகிகளை அனுப்பினார். தகராறில் ஈடுபட்ட உதவி இயக்குனர் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து இயக்குனர் தரப்பு அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியதுடன் துணை நடிகர் ஒருவர் ஷுட்டிங்கை செல்போனில் படம் பிடித்ததால் அவரை கண்டித்து அனுப்பியதாகத் தெரிவித்தனர்.ஷாருக்கான் இப்படத்தையடுத்து அட்லி படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார். இது சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் படமாக உள்ளது. இந்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணியில் அட்லி ஈடுபட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>