ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்க 18 பேருக்கு வாய்ப்பு.. வீடியோவில் திறமை வெளிப்படுத்த அழைப்பு..

by Chandru, Jan 23, 2021, 16:07 PM IST

கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வித்தியாசமான கதை களத்தில் 'டிரைவர் ஜமுனா' - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது!
இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்கு பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டிரைவர் ஜமுனா

'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி. செளத்ரி மிகப்பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாரிக்கவுள்ளார் . இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனே, இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைகளம் என்பதால் நடிகர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.அதன்படி 18 வயது முதல் 22 வயதுக்குள் ஒரு ஆண், 28 வயது முதல் 35 வயதுக்குள் 4 ஆண்கள், 35 வயது முதல் 45 வயது வரை 2 ஆண்கள். 60 வயது முதல் 65 வயது வரை 4 ஆண்கள். 10 வயதில் ஒரு பெண். 40 முதல் 45 வயதுள்ள 2 பெண் என மொத்தம் 18 புதுமுகங்களைத் தேர்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இவர்கள் 2 நிமிட விடியோ வில் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திப் பட நிறுவனத்திற்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்ப வேண்டும் அதில் திறமையானவர்களை தேர்வு செய்து வாய்ப்பளிக்கப்படும் என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில்,கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளது.

You'r reading ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்க 18 பேருக்கு வாய்ப்பு.. வீடியோவில் திறமை வெளிப்படுத்த அழைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை