பிரபல நடிகர் திருமணம் இளவயது தோழியை மணந்தார்..

Advertisement

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு சிலருக்கு காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிவதென்பது அபூர்வம். ஒரு சில சினிமாக்களில் இது போன்ற கதைகள் வந்திருக்கின்றன. நிஜத்தில் அப்படியொரு ஜோடி திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. இந்தியில் ஸ்டுடண்ட் ஆப் த இயர் படம் மூலம் ஹீரோ ஆனவர் வருண் தவான். ஏபிசிடி2, ஸ்ட்ரீட் டான்ஸர், தில்வாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பேஷன் டிசைனர் நடாஷா தலால் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள் அப்போது முதல் இவர்களது நட்பு தொடர்கிறது. வளர்ந்தபிறகு இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். காதல் ஜோடிகளாக சிறகு விரித்து பறந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் கொரோனா லாக்டவுன் இவர்களது திருமணத்துக்கு இடையூறாக வந்தது.

கொரோனா பரவல் முடிந்த பிறகு திருமணம் செய்ய காத்திருந்தனர், அதன்படி நேற்று வருண்-நடாஷா ஜோடி திருமணம் நடந்ததுள்ளது. இந்த திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் வருண் தவானின் உறவினர் அனில் தவான் உறுதி செய்திருக்கிறார். தெற்கு மும்பையில் உள்ள அலிபாக்கில் உள்ள மேன்சன் இல்லத்தில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுத்த படத்தை வருண் தவான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் அவர் கூறும்போது, வாழ்நாள் காதல் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா கால திருமணம் என்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை திருமணத்தில் கடை பிடித்தனர். இதனால் குறைந்த அளவிலான உறவினர்கள். நண்பர்கள் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்னர்.

இந்த காதல் ஜோடிக்கு காதல் மலர்ந்தது சுவாரஸ்யாமான ஒன்று. சிறுவயது அறிமுகனாக இருந்தாலும் வளர்ந்தபின் வருண் தவான் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்க மறுத்ததார் நடாஷா. மூன்று, நான்கு முறை சொல்லியும் ஏற்கவில்லை. நம்பிக்கையை கைவிடாமல் நிச்சயம் தன்னை காதலிப்பார் என்று காத்திருந்தார். ஒரு கட்டத்தில் அது பலித்தது. வர்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். நடாஷா ஒரு பேஷன் டிசைனர். இதுவரை பலருக்கு பேஷன் டிசைனிங் செய்திருக்கிறார். அவரது திருமண உடைகளையும் அவரே டிசைனிங் செய்தார். வருண் தவான்- நடாஷா திருமண விழாவில் நடிகர் இயக்குனர் கரண் ஜோஹர், மனிஷ் மல்ஹோத்ரா, குர்னால் கோஹில் நேரில் பங்கேற்று வாழ்த்தினார்கள். நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், நேஹா துப்யா, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பலர் புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>