கொரோனா காலத்துக்கு முன்பு முதலே சூர்யா இணைய தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவரது சூரரைப் போற்று படம் மற்றும் அவர் மனைவி ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஒடிடியில் வெளியாவதில் சூர்யா பற்றிய பரபரப்பு தொடங்கியது. பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யா தயாரித்தார். கொரோனா லாக் டவுனால் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் ஒடிடியில் அப்படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தியேட்டார் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொன்மகள் வந்தாள் ஒடிடி தளத்தில் வெளியானால் அந்நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. இப்படம் ஒடிடி தளத்தில் அதிக வசூல் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படங்கள் பற்றி அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது.
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கும் படம், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம், கவுதம் மேனன் படம் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்படி பார்த்தால் சிவா இயக்கும் படம்தான் சூர்யாவின் 39வது படம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படம் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். டி.இமான் இசை அமைக்க உள்ளார். இதுபற்றி இமான் கூறும் போது.கலாநிதி மாறன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இசை அமைக்க வாய்ப்பு அளித்தற்கு நன்றி. அதுவும் என்னுடைய பிறந்த நாள் பரிசாக இந்த வாய்ப்பு அமைந்தது சந்தோஷம் என குறிப்பிட்டார். வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் வந்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய கௌரவ தலைவர் ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் பரமு, அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில அமைப்பாளர் சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவிலிருந்து சூர்யாவின் தோற்றம் வெளியானது. தலையில் நீண்ட முடி வளர்த்திருக்கும் சூர்யா அதை ரப்பர் பேண்டில் அழுத்தமாக கட்டி வைத்திருக்கிறார். இது யார் படத்துக்கான தோற்றம் என்பது என்பது உறுதியாகவில்லை. ஆனால் சூர்யாவின் இந்த தோற்றத்தை ரசிகர்கள் நெட்டில் வைரலாக்கி வருகின்றனர். சூர்யாவுக்கு பிஸியாக நடிக்க படங்கள் இருந்தாலும் அவர் நடிக்கும் படங்கள் பற்றி தியேட்டர் அதிபர்கள் எடுத்த முடிவு ஒரு சவாலாக அமையும் என்று தெரிகிறது. அரசியல் உலகில் எதிர்பாராத அதிசயம் நிகழ்வதுபோது சினிமாவுலகிலும் அதிசயங்கள் நிகழ்கிறது. சூர்யா விஷயத்தில் நிகழப்போகும் அதிசயம் என்ன என்பதை பொருத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.