டி.ராஜேந்தர் ராஜினாமா செய்த பதவியை ஏற்றார் உஷா ராஜேந்தர்..

by Chandru, Jan 25, 2021, 15:54 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என். முரளி ராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். டி.ராஜேந்தர் பின்னர்,டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. அவர் தலையிலான சங்கம் வி பி எஃப் கட்டணம், படங்களுக்கு இரட்டை வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று போராடியது. இந்நிலையில் அச்சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் தலைவர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாரம் பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன்.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர். எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு டி. ராஜேந்தர் அறிக்கையில் கூறி உள்ளார். இதையடுத்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டி உள்ளது.

இது குறித்து அச்சங்க செயலாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் வெளியிட்ட கூறும்போது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார். மேலும், அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்தர், கௌரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading டி.ராஜேந்தர் ராஜினாமா செய்த பதவியை ஏற்றார் உஷா ராஜேந்தர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை