பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் சரித்திர பின்னணி படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் தீ விபத்து, நடிகர்களுக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு விட்டு விட்டு தொடர்ந்தது. கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். கொரோனா லாக்ட்வுனில் படப்பிடிப்பு தொடங்கியது அலியாபட் மும்பியிலிருந்து வந்து நடித்துவிட்டு சென்றார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க எண்ணிய நிலையில் ராம் சரணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.
இப்படம் சில மதங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பட ரிலீஸ் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான ஆர் ஆர் ஆர், தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2020 அன்று உலகெங்கும் வெளியாகிறது. என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோருடன் சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் ஆர் ஆர் ஆர், சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது. திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.
தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார். டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக விருக்கிறது.முன்னதாக இப்படத்தின் டீஸர் 2 மாதங்களுக்கு முன் வெளியானபோது அதில் ஜூனியர் என் டி ஆர் தலியில் முஸ்லிம் தொப்பு அணிந்து வருக் காட்சி இருந்தது அதற்கு ஆதிவாசிகள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தியேட்டரை எரிபோம் என்று எச்சரிகை விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர் ஆர் ஆர் படம் வெளியாகும்போது அதை எதிர்த்து போரட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.